அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சமூக ஊடகங்கள் வழியாக நன்கொடை வசூலித்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து துபையின் 'இஸ்லாமிய விவகாரம் மற்றும் தொண்டு அறநிலையத்துறை' The Islamic Affairs and Charitable Activities Department (IACAD) அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

தர்ம சிந்தனையுள்ள மக்கள் உதவுவதையும் தேவையுடைய மக்கள் பெறுவதையும் அமீரக சட்டங்கள் ஒருபோதும் தடை செய்யவில்லை என்றாலும் அது தவறானவர்களின் கைகளில் சென்றடைய கூடாது என்பதற்காக சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அமீரகத்தில் நன்கொடை வசூலிக்க அல்லது பொருட்களாக வசூலிக்க செம்பிறை சங்கம் போன்ற 17 பதிவு பெற்ற நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன, இவர்கள் மூலம் முறையாக விண்ணப்பித்தோ, மேற்படி பதிவு பெற்ற நிறுவனங்கள் அல்லாமல் தனிப்பட்ட முறையில் நற்காரியங்களுக்காக நன்கொடை வசூலிக்க விரும்பினாலோ 'இஸ்லாமிய விவகாரம் மற்றும் தொண்டு அறநிலையத்துறையின் (IACAD) இணைய தளத்திலோ ( www.iacad.gov.ae ) அல்லது அதன் ஆப் (Apps) வழியாக தொடர்பு கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் 15 வேலைநாட்களில் பரீசிலிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதன் மூலம் பிரச்சனைகளுக்குரிய மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்தவர்களிடமோ அல்லது தீவிரவாதிகளின் கைகளிலோ செல்வதிலிருந்து தடுக்கப்படும்.

மருத்துவ தேவையுடையவருக்காக யாராவது சிறிய அளவில் நன்கொடை பெற விரும்பினால் அது குறித்து பகிரங்கமாக எத்தகைய அறிவிப்பும் செய்யாமல் தெரிந்தவர்களிடம் வசூலித்துக் கொள்ளலாம். அதேவேளை சமூக ஊடகங்கள் மூலமாக அறிவிக்க விரும்பினால் கட்டாயம் முன் அனுமதி பெற வேண்டும்.

மக்களுக்கு உதவுவதற்காக மராத்தன் ஓட்டப்பந்தயம் போன்ற நடவடிக்கைகள் மூலம் நன்கொடை பெற முயன்றாலும் கட்டாயம் அனுமதி பெற வேண்டும். கடந்த 3 வருடங்களில் சுமார் 1000 நற்காரியங்களுக்கு நன்கொடை திரட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எவர் ஒருவரும் முறையாக தெரிவிக்காமல் தனக்குத் தானே முடிவு செய்து கொண்டு நன்கொடை நடவடிக்கைகளில் இறங்கக்கூடாது என்றும் அமீரகத்தின் சட்டம் மதிக்கப்பட வேண்டும் என்றும் தவறானவர்களின் கைகளில் திரட்டப்படும் நன்கொடைகள் சென்று சேராதிருக்க ஒளிவுமறைவற்ற வகையிலும் அனுமதிக்கப்பட்ட நடைமுறையின் படியும் மட்டுமே அனைவரும் செயல்பட வேண்டும் என துபை தர்ம அறக்கட்டளைகள் மற்றும் செயல்பாட்டுத்துறையின் (Head of the Charitable Establishments and Activities) தலைவர் தாரிக் அப்துல்லாஹ் அல் அவாதி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Source: 7 Days
தமிழில்: அதிரை நியூஸ்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-