அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,

பெரம்பலூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் சாலை மறியல்

பெரம்பலூர் புறநகர் துறைமங்கலம் மூன்றுசாலை சந்திப்பு அருகே அவ்வையார் தெரு உள்ளது. இங்கு குடியிருப்போருக்கு நகராட்சி நிர்வாகத்தின் மூலம் காவிரி கொள்ளிடக்குடிநீர் 15 நாட்களுக்கு மேலாக வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் தெருக்குழாய்களிலும் தண்ணீர் வராததால் பெண்கள் நீண்டதூரத்திற்கு நடந்து சென்று குடிநீர் எடுத்து வரவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று மாலை துறைமங்கலம் மூன்று சாலை பகுதியில்சாலையின் குறுக்கே காலிகுடங்களை வைத்து மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் நகர்மன்ற தலைவர் ரமேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து நகராட்சி லாரி மூலம் உடனே குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் அவ்வையார் தெருவில் புல், புதர்கள் அதிகமாக காடுபோல் வளர்ந்துள்ளதால் கொசுத்தொல்லை அதிகரித்து சுகாதாரகேட்டை விளைவித்து வருவதாகவும், விஷ பிராணிகள் வீடுகளுக்கு புகுந்துவிடுகின்றன என்று கூறிபொதுமக்கள் நகர்மன்ற தலைவரிடம் முறையிட்டனர். அவ்வையார் தெருமக்களின் கோரிக்கை உடனே நிறைவேற்றப்படும் என்றும், கொள்ளிடக்குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதிஅளித்ததால் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்துசென்றனர். இதனால் திருச்சி சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-