அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய், ஆகஸ்ட் 18
ஸ்காட் ரிச்சர்ட்ஸ் என்ற ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட இங்கிலாந்து குடிமகன் ஆப்கானிஸ்தானில் இயங்கும் அமெரிக்காவை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நன்கொடைகள் தருமாறு அமீரகத்தில் ரெஸிடன்ட் விசாவில் இருந்து கொண்டு சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வைத்ததன் காரணமாக தற்போது துபாய் முரக்கபாத் காவல் நிலையத்தில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி முதல் கைது செய்யப்பட்டு, மேற்கொண்டும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். (என்ன ஊர் சுத்துதா... இல்லையில்லை தலை சுத்துதா!)

துபாயை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், அமீரக சட்டத்தை மீறுபவர்கள் கண்டிப்பாக நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்றும் அமீரகத்தில் நன்கொடைகள் வசூலிக்க முன் அனுமதி பெற்ற, அமீரகத்தில் இயங்கும் பதிவு பெற்ற தொண்டு நிறுவனங்களை தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை என்றும் விளக்கினார்.

இது தான் நன்கொடைகள் வசூலிப்பதை தடுக்கும் அந்த சட்டம்:
Read this if planning charity drive

The Decree No (9) issued in 2015 prohibits collection of donations or advertising of fundraising campaigns without first obtaining prior written approval from the Islamic Affairs and Charitable Activities Department.

Any violation of this decree could result in a penalty of two months to one year of imprisonment and a fine ranging from Dh5,000 to Dh100,000, depending on the court's ruling.

இதற்கிடையில், ஸ்காட் ரிச்சர்ட்ஸின் வழக்கறிஞர் கூறுகையில் அவர் எத்தகைய நன்கொடை வசூலிலும் செய்யவில்லை மாறாக அவர் சார்ந்துள்ள தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை வழங்குவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பதிவையே வெளியிட்டார் எனக் கூறியுள்ளார்.

Source: Khaleej Times
தமிழில்: 
அதிரை நியூஸ்:

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-