அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

ஆதாயமில்லாமல் செட்டி ஆத்துல போட மாட்டான் என கேள்விப்பட்டிருப்போம் அந்தக் கதையாய் ஆகிப்போச்சு நம்ம துபாயில் சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் ஆனாலும் எந்த ஒரு விஷயத்தையும் பலநோக்கு தீர்க்கதரிசன பார்வையுடன் அணுகும் துபாய் நிர்வாகத்தை பாராட்டுவதும் தகும்.

கடந்த வருடம் துபாயின் பல்வேறு பகுதியிலும் உள்ள 100 பஸ் நிறுத்தங்கள் ஸ்மார்ட் ஷெல்டர்ஸ் எனும் தரம் உயர்த்தப்பட்ட பஸ் நிறுத்தங்களாக மாற்றப்பட்டு அங்கு இலவச வைபை மற்றும் மொபைல் போன் ரீசார்ஜ் செய்யும் வசதிகளுடன் பல்வேறு டெலிபோன் சேவைகளுக்கு கட்டணம் செலுத்தும் வசதி, நோல் கார்டு ரீசார்ஜ், பல்வேறு பில் கட்டணங்கள் செலுத்தும் வசதி என தானியங்கி இயந்திரம் மூலம் செய்து தரப்பட்டதன் விளைவாக வாரந்தோறும் சுமார் 90 ஆயிரம் இலவச வைபை பயனாளர்கள் மூலம் 2 மில்லியன் திர்ஹத்திற்கு வியாபாரம் நடக்கிறதாம், இதை தான் சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கிறதுன்னு நம்ம ஊர் பக்கம் சொல்றாங்களோ!

அடுத்த அதிரடியாக, சத்வா, அல் மன்கூல், ஷேக் ஜாயித் ரோடு, காலித் பின் வலீத் ரோடு, அல் ரிக்கா ஆகிய 5 ஸ்மார்ட் ஷெல்டர்களிலிருந்து மத்திய கிழக்கு நாடுகள், ஆசியா பசிபிக் மண்டல நாடுகள், வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா என உலகின் 236 மைய இலக்குகளுக்கு கார்கோ மற்றும் கூரியர் சேவை துவங்கவுள்ளது, மிக விரைவில் அல் முத்தீனா பஸ் ஷெல்டரிலிருந்தும் மேற்படி சேவை நடைபெறும்.

எதிர்வரும் நாட்களில் 30 பஸ் ஷெல்டர்களில் மினிமார்ட்களும் (சிறிய கடைகள்), 30 ஷெல்டர்களில் சிற்றுண்டி மற்றும் மென்பான விற்பனை கூடங்களும், 35 ஷெல்டர்களில் உணவகங்களும் அமைக்கப்பட உள்ளன. (அம்மா உணவகங்கள் இல்லீங்கோ)

எதிர்வரும் மாதங்களில் அனைத்து ஸ்மார்ட் பஸ் ஷெல்டர்களிலிருந்தும் அனைத்து நிறுவன கூரியர் தபால்களை வாடிக்கையாளர் நேரில் பெற்றுக் கொள்ளலாம், சிம் கார்டுகள் விற்பனை, தொலைபேசி நிறுவனங்கள் அறிவிக்கும் மேம்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு மாற்றிக் கொள்ளும் வசதியுடன் இலவச உடல் சுகாதார சோதனை மற்றும் வானிலை மற்றும் சுற்றுச்சூழல் மாசு, ஒலி மாசு குறித்த அறிவிப்புகளும் செய்யப்படவுள்ளன.

மேலும், துபாயில் நூறிலிருந்து 400 ஸ்மார்ட் பஸ் நிறுத்தங்களாக அதிகரிக்கப்பட உள்ள நிலையில், பஸ் ஷெல்டர்களில் செயல்படும் கூறியர் நிறுவனங்கள் காலை 7 மணிமுதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும் ஆனால் மினிமார்ட்கள் எனப்படும் பெட்டிக்கடைகள் 24 மணி நேரங்களும் திறந்திருக்குமாம்.

பொருளாதாரத்தை அள்ளி வழங்கவும் செய்யும் அதேவேளை சுரண்டி எடுக்கவும் செய்யும் இந்த கடுகு தேசத்திற்குள் இன்னும் என்னென்ன வருமோ? எல்லாம் நன்மைக்கே!

Source: Gulf News
தமிழில்: அதிரை நியூஸ்:

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-