அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
திருச்சி, ஆக.6:
திருச்சி- துபாய் இடையிலான விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
துபாய் விமான நிலையத்தில் நடந்த விபத்து காரணமாக திருச்சியில் இருந்து துபாய்க்கு இயக்கப்படும் விமான சேவை நேற்றிரவு ரத்து செய்யப்பட்டது. கடந்த 3ம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் நிறுவனத்தின் போயிங் விமானம் துபாய் விமான நிலையத்தில் இறங்கும் போது சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஓடு பாதையில் மோதி தீப்பற்றியது. இதல் பயணம் செய்த 282 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து காரணமாக விமான நி லையத்தின் ஓடு பாதை சேதம் அடைந்தது. இதனால் அங்கு 3வது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து கார ண மாக திருச் சி யில் இருந்து துபாய்க்கு இயக் கப் ப டும் ஏர் இந் தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை பாதிக் கப் பட் டது. வழக் க மாக திருச்சி விமான நிலை யத் தில் இருந்து நள் ளி ரவு 12.05 மணிக்கு வந்து 12.55 மணிக்கு துபாய் புறப் பட்டு செல் லும். ஆனால் விபத்து நடந்த புதன் கிழமை அன்று 5 மணி நேரம் தாம த மாக வந்து சென் றது. இதே போல நேற்று முன் தி னம் திருச்சி விமான நிலை யத் திற்கு வர வேண் டிய விமா னம் 14 மணி நேரம் தாம த மாக வந்து புறப் ப டும் என ஏர் லைன்ஸ் நிறு வ னம் அறி வித் தது. இதை ய டுத்து பய ணி கள் தங் க ளுக்கு உரிய வசதி செய்து கொடுக்க வேண் டும் என கூறி ஏர் லைன்ஸ் அலு வ ல கத்தை முற் று கை யிட் ட னர்.
பேச் சு வார்த் தைக்கு பின் னர் 186 பய ணி கள் ஓட் ட லில் தங்க வைக் கப் பட் ட னர். நேற்று மதி யம் 2.20 மணிக்கு துபாய் செல் லும் ஏர் இந் தியா விமா னம் திருச்சி விமா ன நி லை யத் திற்கு வந்து 3.்15 மணிக்கு 186 பய ணி க ளு டன் துபாய் புறப் பட்டு சென் றது.
சென்னை -துபாய் விமான சேவை 3வது நாளாக பாதிக் கப் பட் டி ருப் ப தால் திருச்சி விமான நிலை யத் தில் இருந்து துபாய் செல் லும் பய ணி க ளின் எண் ணிக்கை அதி க ரித் தி ருந் தது. இந் நி லை யில் நேற் றி ரவு திருச்சி -துபாய் விமான சேவையை ரத்து செய் வ தாக ஏர் இந் தியா நிறு வ னம் அறி வித் தது. இத னால் துபாய் செல்ல பல் வேறு பகு தி க ளில் இருந்து திருச்சி விமா ன நி லை யம் வந்த பய ணி கள் ஏமாற் றத் து டன் திரும் பிச் சென் ற னர். இன்று துபாய் விமான ஓடு த ளத் தின் நில வ ரத்தை பொறுத்தே திருச்சி -துபாய் விமான சேவை இயக் கப் ப டும் என விமா ன நி லைய வட் டா ரங் கள் தெரி வித் தன.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-