அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

உங்களிடம் பணம் இல்லையென்றால்... ஆட்டோ டிரைவர் என்ன செய்திருப்பார்?
மும்பையை சேர்ந்த ரமீஸ் ஷேக் என்பவர் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி அவசர அவசரமாக ஆட்டோ ஒன்றை பிடித்தார். வெள்ளிக்கிழமை நமாசுக்கு செல்ல வேண்டிய அவசரம் அவருக்கு. பதற்றத்தில் பணப்பையை எடுக்க மறந்து விட்டார். ஆட்டோ ஓடிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து, பணம் எடுக்க மறந்து விட்டது ரமீஷ் ஷேக்கிற்கு தெரிகிறது. ஆட்டோ டிரைவருக்கு கொடுக்க சல்லிக் காசு கூட ரமீஸ் ஷேக்கிடம் இல்லை.
ஆட்டோ டிரைவரிடம் தயங்கியபடி நிலையை எடுத்துக் கூறினார்.'' நமாசுக்கு 15 முதல் 20 நிமிடங்கள் ஆகும். அதுவரை காத்திருந்து மீண்டும் என்னை அலுவலகத்தில் விட்டு விடுங்கள். நான் நீங்கள் கேட்பதை விட, அதிகமாகத் தருகிறேன்'' என்றார். அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார் ஆட்டோ டிரைவர். பணம் இல்லையென்றதும் ஆட்டோவை நிறுத்தவில்லை ரமீஸ் ஷேக் சொன்ன மசூதியை நோக்கி சீராக ஓடிக் கொண்டிருந்தது.
இனி ரமீஸ் ஷேக்கின் பேஸ்புக் பதிவு என்ன சொல்கிறது என்று பார்ப்போம்... ''ஆகஸ்ட் 26ம் தேதி மதியம் 1.40 மணி இருக்கும். வெள்ளிக்கிழமை நமாசுக்கு செல்வதற்காக ஒரு ஆட்டோவை பிடித்தேன். அந்த ஆட்டோவாலா நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு வைத்திருந்தார். ஆட்டோவில் ஏறும் போதே கணபதி ஸ்டிக்கர்தான் என்னை வரவேற்றது. ஆட்டோ சென்றுக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் கழித்துதான் பணம் எடுக்க மறந்ததுவிட்டது நினைவுக்கு வந்தது. மீண்டும் ஆபிசுக்கு சென்று பணம் எடுத்தால் அதற்குள் நமாஸ் முடிந்து விடும். ஆட்டோ டிரரைவரிடம் எனது நிலையை தயங்கி தயங்கிக் கூறினேன்.
கொஞ்ச நேரம் வெயிட் செய்து என்னை மீண்டும் ஆபிஸ் விட்டு விட்டால், கூடுதல் பணம் தருகிறேன் என்றேன். அவர் என்னிடம், 'நீங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்யப் போகிறீர்கள். டென்சனை குறைத்து நிம்மதியாக செல்லுங்கள். கவலைப்பட வேண்டாம். ஆனால் நான் உங்களுக்காக வெயிட் செய்ய முடியாது'' என்றார். ஆட்டோவில் இருந்து இறங்கியதும் சற்றும் எதிர்பார்க்காத நிலையில், தனது சட்டைப்பபையில் இருந்து கொஞ்சம் பணத்தை எடுத்து என்னிடம் தந்தார். 'நமாஸ் முடிஞ்சதும் நீங்கள் திரும்ப செல்வதற்காக இதனை வைத்துக் கொள்ளுங்கள். பத்திரமாக போய் சேருங்கள். என்னிடம் பணம் வாங்குவதற்காக சங்கோஜப்படாதீர்கள்'' என கூறி கையில் பணத்தை திணித்தார்.
இதனை நான் எதிர்பார்க்கவேயில்லை. அவருக்கு நான் எப்படி நன்றி சொல்லப் போகிறேன். மீட் மிஸ்டர். சுக்லாஜி... ஆட்டோவாலாக்களின் முகத்தை மாற்றிக் காட்டியவர். கணபதி பக்தர். நெற்றியில் பெரிய திலகமிட்டவர். தான் செல்லும் பாதையில் சக மனிதர்களை அக்கறையுடன் கவனித்துக் கொள்ளும் மனிதர் '' என தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார் ஷேக்.
ரமீஷ் ஷேக்கின் இந்த பதிவு ஃபேஸ்புக்கில் வைரலாக மாறியது. கடந்த இரு நாட்களில் 5 ஆயிரம் ஷேர்கள் சென்றன. இதுதான் 'ரியல் இந்தியா ' என ரமீஷ் ஷேக்கின் பதிவில் கமாண்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-