அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...






அமீரகத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகள் என ஷார்ஜா - துபாய் சாலைகளை கண்ணை மூடிக்கொண்டு கூட எந்த ஓட்டுனரும், பயணியும் சொல்வர்.

ஷார்ஜா – துபாய் இடையே தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான ஒரு முயற்சியாக 49 மில்லியன் திர்ஹம் செலவில் 3 கி.மீ தூரத்திற்கு 7.3 புதிய மீட்டர் அகலமுடைய இருவழி காங்க்ரீட் சாலை நேஷனல் பெயின்ட்ஸ் மேம்பாலம் அருகில் கட்டப்பட்டு இன்று முதல் வாகனப் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது.

ஷார்ஜா பல்கலைகழகம் எதிரில் உள்ள ஷார்ஜா ஆங்கிலப் பள்ளி பின்பக்க சாலையில் வாகனத்தை செலுத்தினால் மலிஹா சாலையிலுள்ள அவுத் ருக்கன் மேம்பாலம் வழியாக சென்று முஹமது பின் ஜாயித் தேசிய நெடுஞ்சாலையை எளிதாக சென்றடையலாம் என SRTA விளக்கமளித்துள்ளது.

இதன்மூலம் இன்டஸ்ட்ரியல் ஏரியா 15 மற்றும் 17 ஆகிய பகுதிகளில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல் குறையுமென்று எதிர்பார்க்கப்படுவதாக ஷார்ஜா சாலை மற்றும் போக்குவரத்துத் துறை (SRTA) தலைவரும் பொறியாளருமான யூசுப் ஸாலேஹ் அல் சுவைஜி தெரிவித்தார்.

Source: Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-