அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வியாழக்கிழமை இரவு எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்ட போலீஸார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குன்னம் அருகேயுள்ள லப்பைக்குடிக்காடு பேரூராட்சியை சேர்ந்தவர் நைனாமுகமது மகன் ஷாகுல்ஹமீது (40). தனியார் வங்கியில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.

இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த குல்கானிக்கும் (35) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இதனிடையே, கணவன்- மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டுக்கு முன் பிரிந்து சென்ற குல்கானி அவரது தாயுடன் வசித்து வந்தாராம்.

இந்நிலையில், ஷாகுல் ஹமீது தங்கியிருந்த வீட்டில் இருந்து வியாழக்கிழமை மாலை துர்நாற்றம் வீசியதையடுத்து, அந்த வீட்டை திறந்து பார்த்தபோது எரிந்த நிலையில் ஷாகுல் ஹமீது சடலம் கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்த மங்களமேடு போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வாளர் சிவசுப்ரமணியம் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-