அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...எப்பொழுதாவது நண்பர்களுடன் பேசும்பொழுது மட்டும், பார்ட்டிகளில் கலந்துகொள்ளும்பொழுது மட்டும், மிகவும் சோகமாக இருக்கும்பொழுது மட்டும் எனப் பல காரணங்கள் கூறி புகைப்பவர்கள் தங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, ஏனென்றால் ஒன்று அல்லது இரண்டு சிகரெட்டுகள் எதுவும் செய்துவிடாது என்ற நம்பிக்கையை தீவிரமாகவே வைத்திருப்பார்கள். ஆனால், இது உண்மைதானா?

புற்றுநோய் போன்ற நோய்களுக்கு மட்டுமே நீங்கள் புகைக்கும் அளவு, நோயின் தாக்கத்தை தீவிரப்படுத்தும் விதமாக அமையும். மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற பிற உடல்நிலை சீரழிவுக்கு “ஒரே ஒரு சிகரெட்” கூட போதுமானதாக இருக்கும் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

2000-ஆம் ஆண்டின் BMJ ஆய்விதழில் வெளியிடப்பட்ட தகவலின் படி, ஒரு சிகரெட் உங்கள் வாழ்வின் 11 நிமிடங்களைக் குறைக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு நாளைக்கு 20 சிகரெட்டுகள் வரை புகைப்பவர்கள் தங்கள் வாழ்நாளின் 10 வருடங்களை இழந்துவிடுவதாகவும் தெரிவித்துள்ளது.

“Social Smoking" என்றழைக்கப்படும் இந்த ஒன்றிரண்டு சிகரெட்டைப் புகைக்கும் பழக்கம் கொண்ட பெண்களுக்கு, கருவறைக்கு வெளியில், ஃபெல்லோப்பியன் குழாயில் கரு வளரும் ஆபத்தான “ectopic pregnancy" என்னும் நிலை ஏற்படலாம். புகைப்பழக்கம் இல்லாதவர்களை விட, எப்போதாவது அல்லது மிகக் குறைவாக புகைப்பவர்களுக்கு ஐந்து மடங்கு நுரையீரல் புற்றுநோய்க்கான ஆபத்து இருப்பதாகவும் எடின்பர்க் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.

நன்றி: dailymail

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-