அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...அனைத்து App-களிலும் ஒரே பாஸ்வோர்ட், user id பயன்படுத்துபவரா நீங்கள்?

ஸ்மார்ட் போன்கள் எண்ணிக்கை எந்த அளவுக்கு அதிகரித்துவிட்டதோ, அதே அளவிற்கு அதில் உபயோகிக்கப்படும் அப்ளிகேசன்களும் நாளுக்கு நாள் புதிது புதிதாக வெளிவந்து கொண்டிருக்கின்றன..
பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் உபயோகிப்பது, ஷாப்பிங் செய்வது என, நாம் அன்றாடம் Mobile applications-களை உபயோகிப்பதும் அதிகரித்து வருகிறது.
இந்த ஆப்களை இன்ஸ்டால் செய்யும் போதும், உபயோகிக்கும் போதும் பெறப்படும் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் திருட ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அதனை தவிர்ப்பது எப்படி எனத் தெரிந்துகொள்ளவில்லை என்றால் நீங்கள் நிச்சயம் ஓசையில்லாமல் பல ஆபத்துகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
1.Private Policy:
பதிவிறக்கம் செய்யப்படும் App-ஆனது, உங்களுடைய போட்டோக்கள், Contacts (தொடர்புகள்) போன்ற தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்யக்கோரும், இந்த ஆப் அத்தகவல்களை எவ்வாறு உபயோகிக்கும், வேறு யாருடனும் அல்லது வேறு App உடனோ இத்தகவல்களை பகிர்ந்துகொள்ளுமா என, Private Policy-யில் தெளிவாக படித்து புரிந்து கொண்ட பின்னர், App-ஐ உபயோகிக்கலாமா வேண்டாமா என்பதனை முடிவெடுத்துக் கொள்ளுங்கள்..
2. additional security / authentication layers:
புதிதாக பதிவிறக்கம் செய்யப்பட்ட App-பினை இன்ஸ்டால் செய்கையில் login credentials எனப்படும் உங்களின் சுய தகவல்களை பதிவு செய்யுமாறு கேட்கும், அதனை யார் யாரெல்லாம் பார்க்க முடியும், அதற்கு கூடுதல் பாதுகாப்பு ஏதேனும் உள்ளதா என்பதனையும் சரி பார்க்கவும்.
3. critical information:
மொபைல் ஆப் மூலம், அடிக்கடி ஷாப்பிங் செய்பவரா நீங்கள், அப்படியெனில் உங்களுடைய நெட் பேங்கிங் மூலமாக பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் போது உங்கள் நெட் பேங்கிங் பாஸ்வோர்ட், அக்கவுண்ட் நம்பர் போன்ற விவரங்களை App-பில் சேமித்து வைக்காதீர்கள். அதனை வேறு யாரேனும் திருடி உபயோகித்தால் உங்களுடைய வங்கிப் சேமிப்புகள் அடுத்தவருக்கு கைமாறும் ஆபத்து உள்ளது.
4.Unique User Id and Password:
அனைத்து App-களிலும் ஒரே பாஸ்வோர்ட், user id பயன்படுத்துபவரா நீங்கள்?
ஹேக்கர்கள் ஒரு ஆப்பினை ஹேக் செய்தால் போதும், அதை வைத்தே உங்கள் இதர ஆப்களை உபயோகித்து அதில் சேமிக்கப்பட்டுள்ள போடோக்கள், தனிப்பட்ட முக்கியத் தகவல்களை திருடி விடக்கூடும், எனவே ஒவ்வொரு ஆப்பிற்கும் தனிப்பட்ட User Id Password உபயோகிப்பது நல்லது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-