அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


மும்பை: ஃப்ரீடம் ஸ்மார்ட்போன் 251ஐ அறிமுகப்படுத்திய ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் ஃப்ரீடம் 9900 எல்.இ.டி. டிவிக்கான முன்பதிவு வரும் 15ம் தேதி துவங்குகிறது.

ரூ. 251க்கு ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போனான ஃப்ரீடம் 251ஐ அறிமுகம் செய்து வைத்து அனைவரையும் வியக்க வைத்த நிறுவனம் ரிங்கிங் பெல்ஸ். தற்போது அந்த நிறுவனம் ரூ. 9 ஆயிரத்து 900க்கு ஹெச்.டி. எல்.இ.டி. ஃப்ரீடம் 9900 டிவியை அறிமுகம் செய்துள்ளது.
இந்த டிவிக்கான முன்பதிவு சுதந்திர தினத்தன்று துவங்குகிறது. மறுநாளில் இருந்து டிவி டெலிவரி துவங்கும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. டிவிக்கான முன்பதிவு ஒரேயொரு நாள் தான் அதுவும் நிறுவனத்தின் இணையதளம் மூலம் தான் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிவியை முன்பதிவு செய்துவிட்டு வாங்கும்போது பணம் கொடுத்தால் போதும். ஃப்ரீடம் டிவி 31.5 இன்ச் டிஸ்பிளேயுடன் வருகிறது. சந்தையில் உள்ளதிலேயே இது தான் மலிவு விலை எல்இடி டிவி ஆகும்.

ஒரேயொரு நாள் தான் முன்பதிவு என்றால் எத்தனை டிவிக்கள் விற்பனை செய்ய திட்டம் என்று தெரியவில்லை. வாடிக்கையாளர்களிடம் இருந்து அமோக வரவேற்பு கிடைக்கும் என்று ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-