அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சென்னை ஆக 06. நேற்று முன் தினம் சட்டசபையில் ஒரு திமுக உறுப்பினர் அரசின் புதிய அணைக்கட்டு திட்டங்கள் பற்றி கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த தமிழக 
நெடுஞ்சாலைகள்-பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வி.களத்தூர் கல்லாறு குறுக்கே 8 கோடி மதிப்பில் புதிதக ஒரு அணைக்கட்டு விரைவில் கட்டப்படும் என தெரிவித்தார்.

மேலும் மதுரை-காஞ்சிபுரம் உள்பட ஆறு இடங்களில் புதிதாக அணைக்கட்டுகள் கட்டப்படும் என்று நெடுஞ்சாலைகள்-பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வெங்காஞ்சேரி கிராமம் செய்யாறு, திருவண்ணாமலை மாவட்டம் ஆணைவாடி கிராமம் செய்யாறு, பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிராமம் கல்லாறு, மதுரை பொட்டல்பட்டி கிராமம் பாலாறு, புதுக்கோட்டை மாவட்டம் பில்லுவலசை கிராமம் கொழுவனாறு, சிவகங்கை மாவட்டம் திருவுடையார்பட்டி பாலாறு ஆகிய ஆறு இடங்களில் அணைக்கட்டுகள் கட்டப்படும் என்றார்.


வி.களத்தூர் கல்லாற்றின் குறுக்கே அணை கட்டுவதால் விஸ்வக்குடி போல வி.களத்தூர் சுற்றுலா தளமாக மாறும்.  மேலும் வி.களத்தூர் சுற்றி உள்ள பகுதியில் விவசாயம் செழிக்கும். வி.களத்தூர் பகுதியில் நீர் மட்டம் உயரும்.  நமது ஊருக்கு குடி நீர் பற்றாக்குறை ஏற்படாது. 


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-