அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பிள்ளை செல்வம் யார் தான் வேண்டாம் என்பார்கள். சென்ற நூற்றாண்டில் டஜன் கணக்கில் பிள்ளை பெற்று வந்தவர்கள் இருந்தனர்.ஏன், பேரன், பேத்தி எடுத்த பிறகும் கூட குழந்தை பெற்றவர்கள் இருந்தனர். ஆனால், இன்று இப்படி குழந்தை பெற்றுக் கொள்ள பொருளாதாரமும் இல்லை, ஆரோக்கியமும் இல்லை.ஆண், பெண் இருவர் மத்தியிலும் கருவளம் சார்ந்த குறைகள் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணங்கள் பற்பல. எப்படி எளிதாக கருத்தரிப்பது?  

?ஆரோக்கியமாக உடல், சரியான நாட்களில் தாம்பத்தியத்தில் ஈடுபட்டாலே போதும். மேலும், செயற்கையை விட்டு சற்று விலகி, இயற்கைக்கு திரும்புங்கள். எல்லாமே எளிமையாக மாறிவிடும்...  

இயற்கை வழி #1  
உங்களது உடல் எடையை சரி பார்க்க வேண்டும். உடல் பருமன் நீங்கள் கருத்தரிக்கும் வாய்ப்பை குறைத்துவிடும். எனவே, சரியான உணவுகளை சரியான நேரத்தில் சரியான அளவில் உட்கொள்ள மறக்க வேண்டாம். உங்கள் பி.எம்.ஐ அளவை சீராக வைத்துக் கொள்ளுங்கள்.  

இயற்கை வழி #2  

காபி மற்றும் காஃபைன் கலப்புள்ள பானங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டாம். இது பெண்கள் மத்தியில் கருவளத்தில் எதிர்மறை தாக்கம் உண்டாக காரணியாக இருக்கின்றது. எனவே, ஒருநாளுக்கு 200 மில்லிகிராம் அளவுக்கு அதிகமாக காஃபைன் உட்கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 

இயற்கை வழி #3 

ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் புகை பகை தான். அதிகமாக புகைப்பதால் பெண்களின் கருவின் வளம் குறைந்துவிடுகிறது. இதனால், கருத்தரிக்கும் வாய்ப்பும் குறையும். எனவே, இதில் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

இயற்கை வழி #4  

மாதவிடாய் சுழற்சியை சரியாக கணக்கிட்டு வாருங்கள். இந்த சுழற்சியில் நடுவே கரு வலிமையாக இருக்கும் நாட்களில் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.  

இயற்கை வழி #5 

மன அழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஆண், பெண் இருவர் மத்தியிலும் இந்த மன அழுத்தம் கருவளத்தை குறைக்க செய்கிறது. எனவே, அமைதியாக இருங்கள், தியானம், யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடுங்கள். 
இயற்கை வழி #6 

ஆரோக்கியமான உணவுகளில் கவனம் செலுத்துங்கள். துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து. நட்ஸ், தானியங்கள், பழங்கள், நெய் போன்றவற்றை உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.  

இயற்கை வழி #7  

சப்ளிமெண்ட்ஸ்! உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம், ஜின்க் போன்ற சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளலாம். இவை கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்க செய்யும்.

 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-