அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...லண்டனில் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் உல்லாசமாக இருந்து கத்தார் இளவரசி சிக்கியதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என்று ஒரு தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள எக்ஸ்செல்சியர் ஹோட்டலில் நடத்தப்பட்ட சோதனையில் கத்தார் இளவரசி ஷெய்கா சால்வா ஒரே நேரத்தில் 7 ஆண்களுடன் உல்லாசமாக இருந்ததாக பைனான்ஷியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
அந்த செய்தியை அடிப்படையாக வைத்து உலக மீடியாக்கள் செய்தி வெளியிட்டன. இந்த செய்தியை கத்தார் அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக மறுக்கவில்லை. இதற்கிடையே பைனான்ஷியல் டைம்ஸ் இணையதளத்திற்கு சென்று தேடிப் பார்த்தால் இளவரசி செய்தியையே காணவில்லை, நீக்கிவிட்டனர்.
அதேசமயம், இளவரசி செய்தியை வெளியிடாமல் இருக்க கத்தார் தூதரகம் பைனான்ஷியல் டைம்ஸுக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர் தர முன்வந்ததாகவும் அதை அது ஏற்கவில்லை என்றும் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. இதற்கிடையே இளவரசி சால்வா என்று கூறி வெளியாகியுள்ள புகைப்படத்தில் இருப்பது அவர் இல்லை.
அந்த புகைப்படத்தில் இருப்பவர் துபாயை சேர்ந்த மஸ்ரூய் ஹோல்டிங்ஸ் நிறுவன சிஓஓ ஆலியா அல் மஸ்ரூய். இளவரசியின் புகைப்படத்திற்கு பதிலாக ஆலியாவின் புகைப்படம் எப்படி வெளியானது என்று தெரியவில்லை. மொத்தத்தில் சிக்கியவர் யார் என்பது தெளிவாக இதுவரை தெரியவில்லை.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-