அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

கடந்த வாரம் விபத்து ஏற்பட்ட எமிரேட்ஸ் விமான பயணிகள் பலருக்கும் அவர்களின் கேபின் பேக்கேஜ் மற்றும் லக்கேஜூகளும் எரிந்துவிட்டதை கருத்திற்கொண்டு, அவர்களின் இழப்பில் பங்கெடுக்கும் வகையில் எமிரேட்ஸ் விமான நிறுவனம் 7 ஆயிரம் டாலர்களை வழங்கத் துவங்கியுள்ளது.
பயணிகள் எடுத்து வந்த பொருட்களுக்கு 2,000 டாலரும் , அவர்கள் பட்ட இன்னல்களுக்கு 5,000 டாலரும் கொடுக்கிறது


காயம் ஏற்பட்டவர்களுக்கு தனியாக அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளது


துபாய் ஏர்லைன்சா இருந்ததால் இப்படி அறிவிச்சுருக்காங்க இதுவே
நம்ம ஏர்இந்தியாவா இருந்ததுனா...??


மாட்டை மட்டுமே கணக்குல எடுப்பானுங்க
மனுசன் செத்தா கூட திரும்பி பார்க்க மாட்டானுங்க
இதற்கிடையில், விமான விபத்து குறித்து நடைபெற்று வரும் விசாரணையில் காற்றுப் பெயர்ச்சியின் (Wind Shear) காரணமாக விமானம் தீ பற்றியிருக்கலாம் என்ற ஒரு கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Source: Gulf News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-