அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
ஊழல் இல்லாத நாடுகளின் தரவரிசை பட்டியலும் ஓலிம்பிக் பதக்க தரவரிசை பட்டியலும் நிறைய வித்தியாசம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.!
2015 ஆம் ஆண்டின் ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியா 76-வது இடத்தில் உள்ளதாக, ஜெர்மனியில் உள்ள சர்வதேச அமைப்பு கூறியுள்ளது.
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்னும் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும், உலக நாடுகளின் ஊழல் நிலவரம் குறித்து தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.
2015 ஆம் ஆண்டு தரவரிசைப் பட்டியல் கணக்கீட்டுக்காக 168 நாடுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் அந்த நாடுகளின் ஊழலற்ற நிர்வாகம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடான டென்மார்க் தொடர்ந்து ஊழலற்ற நாடாக முதலிடத்தை பெற்றுள்ளது. பின்லாந்த் 2-வது இடத்தையும், சுவீடன் 3-வது இடத்தையும் பெற்றுள்ளன.
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவும், ஆசியா நாடான வடகொரியாவும் ஊழல் நிறைந்த நாடுகள் பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்துள்ளன. பட்டியலில் இந்தியா 76-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஊழலை ஒழிப்போம் என்ற வாக்குறுதியை, தலைவர்கள் நிறைவேற்றவில்லை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவுக்கு ஊழல் பட்டியலில் 83-வது இடமும், வங்காளதேசம் 139-வது இடமும் கிடைத்துள்ளன.
1 டென்மார்க்

2 பின்லாந்து

3 சுவீடன்

4 நியூசிலாந்து

5 நெதர்லாந்து

5 நார்வே

7 சுவிட்சர்லாந்து

8 சிங்கப்பூர்

9 கனடா

10 ஜெர்மனி

10 லக்சம்பெர்க்

10 இங்கிலாந்து

.

.

76 இந்தியா

.

.

158 கினியா

158 வெனிசுலா

161 ஈராக்

161 லிபியா

163 அங்கோலா

163 தெற்கு சூடான்

165 சூடான்

166 ஆப்கானிஸ்தான்

167 வட கொரியா

167 சோமாலியா.!
இந்தியா என்று ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்கள் வாங்குகிறதோ அன்று எல்லோரும் பெருமை பொங்க சொல்லலாம் என் நாடு ஊழல் அற்ற ஜனநாயக நாடு என்று மார்தட்டி சொல்லலாம்! அது வரைக்கும்...இதே நிலை தான்.!
- Muthukumar Subbukutty-0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-