அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


​Galaxy Note 7: சிறப்பு அம்சங்கள் ஒரு பார்வை!

ஐரிஸ் ஸ்கேனருடன் அசத்தலாக களமிறங்குகிறது நோட் 7!

லெனோவோ, ரெட்மி போன்ற நிறுவனங்கள், தங்களை பட்ஜெட் நிலை மொபைல்களின் வரிசையில் நிலைநிறுத்திக் கொண்டன. சோனி போன்ற நிறுவனங்கள், பட்ஜெட் மொபைல் நிறுவனங்களோடு தாக்குப்பிடிக்க முடியாமல், வேறு நாடுகளில் தங்கள் கவனத்தை செலுத்த தொடங்கி விட்டார்கள். பட்ஜெட் நிலை, ஃபிளாக்ஷிப் மொபைல் என இரு பக்கங்களிலும் தனது ஆதிக்கத்தை செலுத்த, போராடி வருகிறது சாம்சங்.சாம்சங் நிறுவனத்தின் நோட் மாடல்களுக்கு என்றுமே, எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும். இன்று நியூயார்க்கில், சாம்சங் காலக்ஸி நோட் 7-ஐ வெளியிட்டுள்ளார்கள். நோட் 5-க்கு அடுத்து, தடாலடியாக ஏறிக் குதித்து, நோட் 7-ஐ வெளியிடுகிறது சாம்சங் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5.

எவ்வளவு அழகாக ஸ்கிரீன் இருந்தாலும், ஒருமுறை கீழே விழுந்தாலும் நொறுங்கிப்போய் விடுகிறது. தற்போது சந்தைக்கு வரும் பல மொபைல்கள், கார்னிங் கொரில்லா கிளாஸ் 4- உடன்தான் வருகின்றன. ஒரு மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்தாலும், மொபைலுக்கு 80 சதவீதம் எதுவும் ஆகாது என உறுதி அளித்தது கொரில்லா கிளாஸ் 4. தற்போது வர இருக்கும் 5-ல், 1.6 மீட்டர் உயரம் என வரையறுக்கப்பட்டு உள்ளது. மொபைலின் இரு பக்கங்களிலும், பொருத்தப்பட்டிருக்கும், இந்த கொரில்லா கிளாஸ் 5, சாம்சங் நோட்டில்தான் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.ஐரிஸ் ஸ்கேனர்

பல மொபைல்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக, நாங்கள் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் தருகிறோம் என மார்தட்டிக்கொண்டு இருக்க, சாம்சங் ஒருபடி மேலே போய், ஐரிஸ் ஸ்கேனரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம், உங்கள் கண்களில் இருக்கும் கருவிழியை ஸ்கேன் செய்து, மொபைலை லாக் செய்யலாம்.

வாட்டர் ரெஸிஸ்டன்ட்

சாம்சங் S சீரிஸ், சோனி Z மொபைல்களைப் போல், நோட் 7ம் வாட்டர் ரெஸிஸ்டன்ட் தொழில்நுட்பத்துடன் வருகிறது. IP68 ரேட்டிங் என்பதால், ஒரு மீட்டர் ஆழத்திற்கு கீழும், இந்த மொபலை நீரில் பயன்படுத்தலாம்.

எஸ் பென்

சாம்சங் நோட்டில் இருக்கும் S Pen வசதி இதிலும் இருக்கிறது. சற்றே மேம்படுத்தப்பட்ட S Pen-ஐ இதில் வடிவமைத்து இருக்கிறார்கள். மொபைல் வாட்டர் ரெஸிஸ்டென்ட் என்பதால், தண்ணீருக்கு அடியிலும், இந்த பென் வேலை செய்யும்.ஸ்பெக்ஸ்3500 mAh பேட்டரி
இன்டெர்னல் மெமரி: 64ஜிபி
கூடுதல் மெமரி: 256ஜிபி வரை
வொயர்லெஸ் சார்ஜிங்
4 ஜிபி ரேம்
5.7" ஸ்கிரீன்
12 மெகாபிக்ஸல் டூயல் பிக்ஸல் ரியர் கேமரா
5 மெகாபிக்ஸல் ஃபிரன்ட் கேமரா

5-ல் இல்லை, 7-ல் இருக்கு

* Curved திரை
* அதிகவேக சார்ஜ் செய்யும் டைப்-சி USB போர்ட்
* ஐரிஸ் ஸ்கான்னர்
* கொரில்லா கிளாஸ் 5
* இன்னும் துள்ளியமான S Pen
* மைக்ரோ SD ஸ்லாட்
* 3500 mAh பேட்டரிஇன்னும் ஆறு வாரத்தில், ஆப்பிள் நிறுவனமும் ஐஃபோனை 7 பிளஸை லாஞ்ச் செய்ய இருக்கிறார்கள். மொபைல் சந்தையில் , ஐஃபோன் 7க்கு போட்டியாக நோட் 7 இருக்கும் என்கிறார்கள்.சாம்சங் நிறுவனத்தின், புதிய அறிமுகமான Galaxy Note 7, ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. செயல்திறன் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை ஒருங்கே கொண்டதோடு வலுவான பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக note 7 இருக்கும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய பாதுகாப்பு அம்சமான Iris Scanner, fingerprint scanner, தண்ணீர், தூசு உட்புகாத தொழில்நுட்பம், S-pen, 15GB அளவு கொண்ட சாம்சங் கிளவுட் வசதி, Secure Folder, 5.7 அங்குல HD டிஸ்பிலே, Android 6.0.1 Marshmallow இயங்குதளம், Gear VR, 4GB RAM, 64 GB internal memory என பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட நோட்7 பலத்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றே கூறலாம்.

மேலும், 3500mAh பேட்டரி, நோட்7-ற்கு சக்தி தருகிறது, 5 அடி ஆழ தண்ணீரில் 30 நிமிடங்கள் நோட் 7-ஐ வைத்து சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. கேலக்ஸி சீரியஸின் முதல் முறையாக Type-C to micro-USB adapters இதில் வர உள்ளது.

போன் ஈரமாக இருக்கும் சமயத்திலும் எழுத S-pen வசதி உள்ளது, போனை அன்லாக் செய்யமலே இதில் இணைக்குப்பட்டுள்ள S-penஐ உபயோகிக்கலாம் என்பது சிறப்பு.

Iris Scanner:

சாம்சங் மொபைலில் புதிய வரவாக இந்த அம்சம் உள்ளது, கூடுதல் பாதுகாப்பு அம்சமாக இருப்பதால் உபயோகிப்பவரின் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.

இந்தியாவில் இதன் விலை 55,000 ரூபாய் முதல் 60,000 ரூபாய் வரை என்ற விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Samsung Galaxy Note 7 Specifications:

OS: Android 6.0.1 (Marshmallow)

Network: LTE Cat.12 / LTE Cat.10 / LTE Cat.9

Dimension: 153.5 x 73.9 x 7.9mm, 169g

Weight: 169 grams.

AP: Octa core (2.3GHz Quad + 1.6GHz Quad), 64 bit, 14 nm process

Memory: 4GB RAM (LPDDR4), 64GB (UFS 2.0)

Display: 5.7” Quad HD Dual edge Super AMOLED 2560 x 1440 (518ppi)

Camera
Rear: Dual Pixel 12MP OIS (F1.7),
Front: 5MP (F1.7)

Battery: 3,500 mAh, Fast Charging on wired and wireless Wireless Charging compatible with WPC and PMA

Payment: NFC, MST

Connectivity: Wi-Fi 802.11 a/b/g/n/ac (2.4/5GHz), MIMO(2×2) 620Mbps, Bluetooth® v 4.2 LE, ANT+, USB Type-C, NFC, Location (GPS, Glonass, Beidou)

Sensors: Barometer, Fingerprint Sensor, Gyro Sensor, Geomagnetic Sensor, Hall Sensor, HR Sensor, Iris Sensor, Proximity Sensor, RGB Light Sensor

Audio: MP3, M4A, 3GA, AAC, OGG, OGA, WAV, WMA, AMR, AWB, FLAC, MID, MIDI, XMF, MXMF, IMY, RTTTL, RTX, OTA

Video: MP4, M4V, 3GP, 3G2, WMV, ASF, AVI , FLV, MKV, WEBM

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-