அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

துபாய்: நம்பிக்கையோடு இருந்தால் எந்த சிரமமான சூழலும் எப்போது வேண்டுமானாலும் மாறும் என்பதற்கு உதாரணமாக சமீபத்தில் துபாய் விமான விபத்தில் உயிர் தப்பிய இந்தியாவை சேர்ந்த ஒருவருக்கு துபாயில் தற்போது இன்ப அதிர்ச்சியாக ரூ 6.6 கோடி பரிசு குலுக்கலில் கிடைத்துள்ளது. இறைவன் நன்மை செய்யவே எனக்கு மறுவாழ்வு அளித்துள்ளதை உணர்கிறேன் என்கிறார் பரிசு பெற்ற காதர்.

கேரள மாநிலம் முஹம்மது பசீர் அப்துல் காதர் 62 இவர் துபாயில் 37 ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.இவர் சமீபத்தில் விடுமுறையில் துபாயிலிருந்து கேரளா வரும் போது துபாய் டூட்டி பிரி சார்பில் நடத்தப்படும் Dubai Duty Free Millennium Millionaire என்ற சிறப்பு அதிர்ஷ்ட பரிசு திட்டத்தில் டிக்கெட்டை வாங்கியிருந்தார்.

இவர் ஊர் சென்று விட்டு சமீபத்தில் துபாயில் விபத்துக்குள்ளான EK521 விமானத்தில் பயணம் செய்து உயிர் தப்பி துபாய் திரும்பியவர்களில் இவரும் ஒருவராவார்.

இந்தாண்டிற்கான மில்லினியம் மில்லியன்ர் அதிர்ஷட குலுக்கலில் இவர் வாங்கியிருந்த 0845 என்ற எண்ணுடைய டிக்கெட்டிற்கு பரிசு கிடைத்துள்ளது. பரிசு தொகை 1 மில்லியன் டாலர் ஆகும் இவர் இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற்று நாடு திரும்ப இருந்துள்ள நிலையில் பரிசு கிடைத்ததை அறிந்த அவர் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளானார்.

இது குறித்து முஹம்மது பசீர் அப்துல் காதர் கூறியதாவது

சமீபத்தில் விமான் விபத்தில் இறைவன் அருளால் உயிர் பிழைத்தேன் . இறைவன் ஏதோ நன்மைக்காக நல்ல நோக்கத்திக்காக என்னை விமான விபத்தில் காப்பாற்றி எனக்கு மறு வாழ்வை அளித்துள்ளதை இப்போது உணர்கிறேன்.எனது மகன் பல ஆண்டுகளாக உடல் நிலை சரியில்லாமல் உள்ளார் அவரின் மருத்துவ செலவுக்கு ரூ 18 லட்சம் வரை கடன் வாங்கியிருந்தேன் இந்த பணத்தின் மூலம் எனக்கு உள்ள கடனை திருப்பி செலுத்துவதோடு ஏழை குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய உள்ளேன். என்றார்.

துபாய் டூட்டி ப்ரீ கடந்த 1999ம் ஆண்டு முதல் அதிர்ஷ்ட குலுக்கல் நடத்தி வருகிறது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-