அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய், ஆகஸ்ட் 17
ஹஜ்ஜூப் பெருநாளைக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் ஹஜ்ஜூப் பெருநாள் விடுமுறை ஜூரம் ஊருக்குச் செல்வது, ஹஜ் உம்ராவிற்கு செல்வது, ஷாப்பிங் செய்வது என பலரையும் பரபரப்பு பற்றி வருகிறது. இந்நிலையில் அமீரகத்தில் தனியார் துறைகளில் பணியாற்றும் ஊழியார்களுக்கு 5 தினங்கள் விடுமுறை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படகிறது.

நடப்பு ஹிஜ்ரி மாதம் துல்காயிதா பிறை 30 உடன் முடிந்தால் செப்டம்பர் 9 முதல் 13 ஆம் தேதி வரை தொடர் விடுமுறை கிடைக்கலாம். ஒருவேளை துல்காயிதா பிறை 29 உடன் நிறைவுற்றால் செப்டம்பர் 9 முதல் 12 ஆம் தேதி வரை 4 தினங்கள் மட்டுமே விடுமுறை கிடைக்கும்.

அதேவேளை அரசுத் துறை ஊழியர்களுக்கு மேற்கூறிய பிறை கணக்கின்படி 6 அல்லது 5 தினங்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும், குவைத்தில் அரசுத் துறை ஊழியர்களுக்கு 9 நாள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு விட்டதாக செய்திகள் கூறுகின்றன.

எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் தேதியன்று சவூதி மற்றும் அமீரக பிறை பார்த்தல் கமிட்டியினர் ஒன்று கூடி ஆலோசிக்கவுள்ள நிலையில், ஷார்ஜா கோளரங்கம் எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி வியாழன் அன்று பிறை தென்பட வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

Source: Emirates 247
தமிழில்: 
அதிரை நியூஸ்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-