அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
:
சவூதி அரேபியா, ஆகஸ்ட் 06
இந்த வருட ஹஜ் கடமையை சவூதி நாட்டவர்களும், சவூதியில் வாழும் வெளிநாட்டினருமாக சுமார் 49,000 பேர் மிகக்குறைந்த செலவில் சவூதி அரசின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தின் ஏற்பாட்டின் கீழ் புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ள அனுமதி பெற்றுள்ள 76 நிறுவனங்கள் மூலம் அனுமதிக்கப்படுவர்.

மின்னணு (Online) வழியாக விண்ணப்பங்களை 24 மணிநேரமும் இயங்கும் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம், மேலும் இதுகுறித்த புகார் பதிவு செய்வதாக இருந்தால் ஹஜ் அமைச்சகத்தின் தொடர்பு மையங்களில் (Haj Ministry's Communication Centers) பதிவு செய்யலாம்.

மேலும், மினா கூடாரங்களில் புதிதாக 8500 ஏர் கூலர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது கடந்த வருடம் செயல்பாட்டிலிருந்த ஏர் கூலர்களை விட ஆற்றல் நிறைந்தது. சென்ற வருடம் கூடாரங்களில் நிலவிய 33 டிகிரி சூட்டை விட 21 டிகிரி சூட்டையே கூடாரங்களில் நிலவச் செய்யும்.

Source: Arab News
தமிழில்: 
அதிரை நியூஸ்!

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-