அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
துபாய், ஆகஸ்ட் 14
சாலை மற்றும் போக்குவரத்துக் கழகத்தின் (RTA) கீழ் இயங்கும் துபாய் டேக்ஸி கார்ப்பரேசன் (DTC) அடுத்த ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் 40% டேக்ஸி போக்குவரத்தை அதிகரிக்கவுள்ளது, அதாவது தற்போது இயக்கப்படும் 5000 கார்களுக்கு பதிலாக 2021 ஆண்டிற்குள் 7000 கார்களை இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது அதிகரித்து வாடகை கார்களின் தேவை மற்றும் எக்ஸ்போ 2020 ஆகியவற்றை கருத்திற்கொண்டு செயல்படுத்தப்பட உள்ளது.

அதேபோல் தற்போது இயக்கப்படும் 113 லிமோசின் (Limousine) எனப்படும் சொகுசு கார்கள் 500 ஆகவும் அதிகரிப்படும்.அதேபோல் 50 சதவிகிதமான கார்கள் ஹைப்ரீட் (Hybrid) எனப்படும் பெட்ரோல் மற்றும் மின்சக்தியில் இயங்கும் கார்களாகவும் மாற்றப்படுவதன் மூலம் டேக்ஸிக்களிலிருந்து வெளிப்படும் கரியமில வாயு 2% கட்டுப்படுத்தப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.

தற்போது பரீட்ச்சார்த்தமாக துபாயில் இயக்கப்பட்டு வரும் ஹைப்ரீட் வகை கார்கள் 145 லிருந்து 2280 கார்களாக மாற்றப்படவுள்ளன, இதுவும் 2021 ஆம் ஆண்டிற்குள் நிகழும்.

மேலும், பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்ப சொந்த கார்களையும், வாடகை கார்களையும் தவிர்த்துவிட்டு பள்ளிப்பேருந்துகளில் அனுப்புமாறும் பெற்றொர்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. தற்போது இயக்கப்படும் பள்ளிப்பேருந்துகள் 117 என்ற எண்ணிக்கையிலிருந்து 2021 ஆம் ஆண்டிற்குள் 650 ஆக அதிகரிப்படவுள்ளது.

Source: 7 Days
தமிழில்: 
அதிரை நியூஸ்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-