அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வனக்காப்பு காடுகளில் மான், மயில், முயல், குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன. குன்னம் அருகே திருமாந்துறை பகுதியில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இந்நிலையில் இப்பள்ளியை சுற்றி அமைக்கப்பட்ட கம்பி வேலியை தாண்டி செல்ல முயன்ற மூன்று பெண் புள்ளி மான்களும், ஒரு ஆண் புள்ளி மானும் சிக்கி கொண்டது. இதில் முகம், கழுத்து பகுதியில் பலத்த காயமடைந்து மான்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து கிடந்தன. மேலும் ஒரு ஆண் புள்ளி மான் பள்ளி வளாகத்தில், வெளியே செல்ல முடியாமல் சுற்றி திரிந்துள்ளது. இது பற்றி பள்ளி நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் உயிருடன் சுற்றி திரிந்த புள்ளிமானை வனப்பகுதிக்கு விரட்டி விட்டனர். பின்னர் இறந்த புள்ளி மான்களின் உடலை கைப்பற்றி மருத்துவக்குழு மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வனப்பகுதியில் அடக்கம் செய்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-