அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


தனியார் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், சுதந்திர தினத்தை முன்னிட்டு உள்நாடு மற்றும் வெளிநாடு விமான போக்குவரத்தில், சில குறிப்பிட்ட பாதைகளில் சிறப்பு கட்டணச் சலுகையை அறிவித்துள்ளது.

இதற்கான புக்கிங் தேதி ஆகஸ்டு 9 முதல் 11 வரை ஆரம்பமாகிறது. இந்த சலுகை மூலம் ஆகஸ்டு 18 முதல் செப்டம்பர் 30 வரை பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி உள்நாட்டு போக்குவரத்து கட்டணச் சலுகையாக ரூ.399-க்கு விமான டிக்கெட் வழங்கப்படுகிறது. அகமதாபாத்-மும்பை, அமிர்தசரஸ்-ஸ்ரீநகர், மும்பை-ஐதராபாத், மும்பை-கோவா, கோவை-ஐதராபாத், பெங்களூரு-கொச்சி, பெங்களூரு-சென்னை ஆகிய வழிதடங்களில் மட்டும் இந்த கட்டணச் சலுகையில் பயணிக்கலாம்.

சர்வதேச அளவில் துபாய்-டெல்லி மற்றும் துபாய்-மும்பை ஆகிய வழித்தடங்களில் கட்டணச் சலுகையாக ரூ:2,999-க்கு விமான டிக்கெட் வழங்கப்படுகிறது.அடிப்படை கட்டணமாக இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் வரிகள் கூடுதலாக சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியா
இதேப்போன்று ஏர் இந்தியா நிறுவனமும் மழைக்கால விற்பனையாக உள்நாட்டுப் பயண கட்டணமாக ரூ.1,199 எனவும் வெளிநாட்டுப் பயண கட்டணத்தை (சில வழித்தடங்களுக்கு மட்டும்) ரூ.15,999 எனவும் அறிவித்துள்ளது.

ஒரு வழிப் பயணம்
இந்தப் பயண கட்டணங்கள் எகானமி வகுப்பில் செல்பவர்களுக்கான ஒரு வழிப் பயணத்திற்கு மட்டுமே என்று ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது. 


ஆகஸ்ட் 15 வரை  

ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 30 வரையிலான உள்நாட்டுப் பயணத்திற்கும், வெளிநாட்டுப் பயணத்திற்கு செப்டம்பர் 15 முதல் டிசம்பர் 15 வரியிலான பயணத்திற்கும் ஆகஸ்ட் 15 வரை டிக்கெட் புக் செய்யலாம் என்று அறிவித்துள்ளது. 
பெங்களூர்-சென்னை இந்தக் கட்டணத்தில் 
பெங்களூர்-சென்னை, தில்லி - ஜெய்ப்பூர், சென்னை-பெங்களூர் போன்ற சில வழித்தடங்களில் மட்டுமே செல்ல முடியும் என்றும் அதற்கான எல்லாக் கட்டணங்களையும் சேர்த்து ரூ.1,199 ஆகும். ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தைப் போன்று ஏர் இந்தியா நிறுவனமும் எத்தனை டிக்கெட்டுகள் ஆஃபர் விலையில் விற்கப்படும் என்று கூறவில்லை.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-