அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...இன்டெர் சேஞ்சஸ் (Inter Changes) எனப்படும் போக்குவரத்து இணைப்புப் சுற்றுப் பாலங்கள் சர்வதேச ரீதியில் மிகவும் பரவி வருகின்றன. இந்த வகை பறக்கும் பாலங்கள் சீனாவிலும், அமெரிக்காவிலும் அதிகம். அத்தகைய தலைசுற்றல் பாலங்களில் ஒன்று துபாய் ஷேக் ஜாயித் ரோட்டிலும் உண்டு

துபாயில் பெருகிவிட்ட போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த 36 புதிய பாலங்கள், புதிய சாலைகள், புதிய ஷின்டாகா (கடல் மேல்) போக்குவரத்துப் பாலம் (மாதிரி படம் காண்க), கிரீக் (கடல்) நீர்வழி இணைப்புக்கள், பயணியர் நிலையங்கள் மற்றும் பாதசாரிகள் முக்கிய சாலைகளை கடக்க நடைபாலங்களை நிர்மானிக்கவும் அதேவேளை சுற்றுச்சூழலை பாதுகாக்க சாலை ஒரங்களில் 600 ஹேக்டேர் பரப்பளவில் மரங்களை நடவும் துபை போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது (RTA). (இது நம்ம நாட்ல மரம் நட்டு அன்றோடு மறந்து விடுகின்ற சம்பிரதாய செயல் அல்ல).

இந்த திட்டங்களில் பெரும்பாலானவற்றை எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு முதல் காலாண்டிற்கு முடிக்கவும் எஞ்சியவற்றை படிப்படியாக 2019 ஆம் ஆண்டுக்குள் முடிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

பயணிகளின் வசதிக்காக புரூஜ் கலீஃபா மெட்ரோ ஸ்டேஷனை விரிவுபடுத்துதலும் இத்திட்டங்களில் ஒன்றாகும். இதன்வழி நாளொன்றுக்கு 1,80,000 பயணிகள் அவர்களுக்கான பல்வேறு சிறப்பு வசதிகளுடன் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேற்குறிப்பிட்டுள்ள அத்தனை வசதிகளையும் செய்து தரப்போவது துபை சாலை மற்றும் போக்குவரத்து துறை (RTA) மட்டுமே. (நம்ம ஊர்ல போக்குவரத்து துறை பஸ்ஸை ஒழுங்காக பராமரித்தால் அதுவே பெரிய விஷயம்)

ஆனால் ஒன்னுங்க நம்ம தமிழக சத்த சபையில் அடித்துக் கொள்வது போல் நாந்தான் ரெயிலு வுட்டேன், நாந்தான் பாலங்கட்டுனேன்னு சாதனை கூச்சல் போடுற ஒருத்தனக் கூட இங்கு காணோமுங்க! அதுல ஊழல், விசாரணை கமிஷன்னும் ஒன்னுகூட இல்லீங்க! இதைத்தான் நிறைகுடம் தளும்பாதுன்னு சொல்றாங்களோ!
Sources: Khaleej Times & Gulf News


 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-