சென்னையிலிருந்து முதல்கட்டமாக ஹஜ் கமிட்டி மூலம் புறப்பட்ட ஹாஜிகள்

வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயல்படுத்தி வருகிறது.
இந்த ஆண்டு நாடு முழுவதும் இருந்து 1,00,020 பேருக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ள, ஹஜ் கமிட்டி மூலம் ஏற்பாடு செய்யப்படுவார்கள். இதுமட்டுமில்லாமல், 36 ஆயிரம் பேர் தனியார் மூலம் செல்கிறார்கள்.
தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து 2,600 பேர் புனித ஹஜ் யாத்திரைக்கு தேர்வு செய்யப்பட்டனர். புனித ஹஜ் பயணத்திற்காக சென்னையில் இருந்து முதல் விமானம் நேற்று இரவு சவுதி அரேபியாவிற்கு சென்றது. இந்த விமானத்தில் ஒரு குழந்தை, 162 பெண்கள் உள்பட 341 பேர் பயணம் செய்தனர்.
அமைச்சர் வழி அனுப்பினார்
புனிதஹஜ் பயணம் சென்றவர்களை அமைச்சர் நிலோபர் கபில் சால்வை அணிவித்து வழி அனுப்பி வைத்தார். அப்போது சிறுபான்மை நலத்துறை செயலாளர் கார்த்திக், தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி செயல் அலுவலர் முகமது நசிமுதின், இந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவர் அபுபக்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.
24–ந்தேதி வரை 8 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து செல்லும் ஹஜ் பயணிகளுக்கு விமான நிலையத்தில் சிறப்பு கவுண்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இந்திய ஹஜ் சங்க துணை தலைவர் அபுபக்கர் கூறுகையில், ‘இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஹஜ் கமிட்டி சார்பில் 1 லட்சத்து 20 பேரும், தனியார் மூலமாக 36 ஆயிரம் பேரும் புனித ஹஜ் பயணத்திற்கு செல்கின்றனர். தமிழகத்தில் இருந்து 2,453 பேரும், புதுச்சேரியில் இருந்து 93 பேரும், அந்தமானில் இருந்து 53 பேரும் புனித பயணத்திற்கு செல்கின்றனர்’ என்று தெரிவித்தார்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.