அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
காஷ்மீர் மக்கள் போராட்டத்தை முடக்குவதற்காக 32 நாட்களில் 13 லட்சம் பெல்லட்டுகள் பயன்படுத்தியதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஜூலை 8 ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி புர்ஹான் வானி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து காஷ்மீரில் ஏற்பட்ட போராட்டம் இன்றுவரை நீடித்து வருகிறது.


தெற்கு காஷ்மீரில் பெரும்பாலான பகுதிகளில் இன்னமும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. அப்பாவி பொதுமக்களை படைகள் பெல்லட் துப்பாக்கிகளால் துளைத்தெடுப்பதாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழங்கின. காஷ்மீர் பிரச்சினை மீதான தீர்மானத்துடன் மழைக்கால கூட்டத்தொடரும் முடிந்துவிட்டது.

இந்நிலையில், காஷ்மீரில் பெல்லட் துப்பாக்கிகளுக்கு தடை கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது சிஆர்பிஎப் கீழ்க்கண்டவாறு பதிலளித்துள்ளது:

காஷ்மீர் போராட்டத்தை அடக்க 3000 பெல்லட் கார்ட்ரிட்ஜ்-க்கள் பயன்படுத்தப்பட்டன. 1.3 மில்லியன் அளவுக்கு பெல்லட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கலவரங்கள் கட்டுக்கு அடங்காமல் செல்லும்போது வழக்கமான தடுப்பு முறைகளைப் பயன்படுத்தி இயல்பு நிலையை மீட்பது மிகக்கடினம். எனவே, பெப்பர் (மிளகுக் குண்டுகள்) குண்டுகள், பெல்லட்டுகள் உட்பட 14 வகையான ஆயுதங்கள் கலவரத் தடுப்புக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஜூலை 8 முதல் ஆகஸ்ட் 11 வரை 8,650 கண்ணீர் புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 2,671 பிளாஸ்டிக் பெல்லட்டுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-