அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

ரியோ டி ஜெனிரோ : ரியோ ஒலிம்பிக் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகின் நம்பர்-1 வீராங்கனையான ஸ்பெயினின் கரோலினா மரினிடம் போராடி தோற்றதை அடுத்து சிந்துவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. ரியோ ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டியில் மிக அற்புதமாக ஆடிய பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி, இந்தியாவுக்கு 2வது பதக்கத்தை உறுதி செய்தார். 

 பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நேற்று இரவு நடந்தது. ஆரம்பத்தில் பின்தங்கிய சிந்து, திடீர் புயலாக மாறி முதல் செட்டை கைப்பற்றினார். 2வது செட்டை மரின் கைப்பற்ற, கடைசி செட்டில் டென்ஷன் எகிறியது. இதில், மரினுக்கு சரிநிகர் ஈடுகொடுத்து ஆடிய போதிலும், சிந்துவால் வெற்றியை எட்ட முடியவில்லை.

3வது செட்டை இழந்த சிந்து, 21-19, 12-21, 15-21 என்ற செட்களில் போராடி தோல்வி அடைந்து தங்கத்தை பறிகொடுத்தார். வெள்ளிப் பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தார். மகளிர் மல்யுத்தத்தில் சாக்ஷி வெண்கலம் பெற்று இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்தார். சிந்து, வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை சிந்து. மோடி உள்ளிட்ட தலைவர்களும், விளையாட்டு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
- See more at: http://m.dinakaran.com/Detail.asp?Nid=240016#sthash.HFKxLXtU.dpuf

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-