அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...



தமிழகம்.நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முகைதீன் என்பவர்




குவைத் நாட்டிற்கு வேலை தேடி 2012ஆம் ஆண்டு வந்துள்ளார்




குவைத்தில் ...??.....!!!!! ஏரியாவில் இருந்து...... வேலை பார்த்து வந்துள்ளார்




அந்த பகுதி அரபிகள் குடியுருக்கும் பகுதி




இவரோடு உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த ஒருவன் ஒரே ரூமில்

தங்கி உள்ளனர்




பல மாதங்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்றுள்ளது ???




18 .05 .2012. அன்று போலீஸ் சாரால் இருவரும் கைது செய்யப்பட்டு




24 ஆண்டுகள் சிறை தண்டனை என தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது




பின்பு தற்சமயம் நான்காண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள்




போலீசார் பிடித்து சென்ற பின்பு சில மாதம் சிறையில் இருந்த இவர்களுக்கு எப்படி சட்டத்தை நாட வேண்டும் என்பது தெரியாமல் இருந்ததால்
எவ்வித வழக்கறிஞரும் இல்லாமல் இருந்துள்ளனர்




சுமார் ஆறு மாதம் கால அவகாசம் குவைத் அரசு வழங்கி வழகறிஞர் வைத்து வாதாட சொல்லி இருக்கிறது




யாருக்கும் இந்த சம்பவம் தெரியாததாலும் எந்த வழக்கறிஞரும் வைத்துக் கொள்ளாததாலும்




24 வருட சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்




நடந்த சம்பவம் தான் என்ன ??? போலீஸ் சொல்லும் சம்பவம் ;

FIR RIPORT ??????????




குவைத்தி ஏரியாவில் வசித்து வந்த up யை சேர்ந்த அந்த அயோக்கியன் அதே ஏரியாவில் உள்ள 17 வயது அரபி பையனோடு ஓரினை சேர்க்கை செய்ததாகவும்




அந்த சம்பவம் நடக்கும் போது தமிழகத்தை சேர்ந்தவன் வெளியில் இருந்து ஆள் வருகிறார்களா என்று வேவு பார்த்ததாகவும்




இது பல மாதமாக நடந்து வந்துள்ளது எனவும் அரபி பையனுக்கு திடிரென உடல் நிலை பாதிக்கப்பட்டதில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பிறகு தெரிந்ததாகவும்




பின்பு அவர்களை

கைது செய்துள்ளதாகவும் கூறப்பட்டது




முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள் சிறைசாலைக்குள் இருக்கும் தமிழர்கள் குறித்த தகவல் திரட்டும் போது இந்த தகவல்

நமக்கு கிடைத்தது




சிறையில் இருக்கும் தமிழரிடம் உண்மை

அறிய முற்பட்டோம் ஆதி போன் வழியாக தொடர்பு கொண்டு பேசினார்




அந்த வாலிபனிடம் நாம் கேட்டப் போது எனக்கும் அந்த இழி செயலுக்கும் எந்த தொடர்பும் கிடையாது




அவனோடு (UP) இருந்ததால் தான்

எனக்கு இந்த நிலை




என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று கூறினார்




2013 இல் ஜாப்ரியாவில் உள்ள மிகப் பெரிய வழகறிஞரை பார்த்து இந்த விசயத்தை சொன்னோம்




முதலில் மறுத்த அவர் இரண்டு நாள் கழித்து வரவும் என்று கூறினார்




இரண்டு நாள் கழித்து சென்ற போது அவர் நான் வாதாடி தமிழகத்தை சேர்ந்தவனை மீட்டு தர அதாவது தண்டனையை குறைத்து தர நான் வாதாட தயார்




நான் கேட்கும் பீஸ் தர வேண்டும் எனக் கூறினார்




சுமார் 1000 தினார் கேட்டார் பாதிக்கப் பட்ட அரபியிடமும்




சமரச பேச்சு. நடத்த

நாம் தயார்




ஆனால் அரபி கேட்கும் பணத்தை தர தயாரா என்றும் கேட்டார்




இந்த தகவலை இந்த வாலிபனின் வீட்டுக்கு தொடர்பு கொண்டு கேட்டப் போது அடுத்த நாள் சாப்பாடு குறித்து கவலையுடன் இருக்கும் நிலை தான் என நமக்கு தகவல் நமக்கு வந்தது




பின்பு நாம் அதில்

இருந்து விலகி விட்டோம்




இப்போதும் இந்த வழக்கை நடத்தலாம் அதற்கான பணம் வேண்டும் வாதாட

_______ ________




அன்பார்ந்த தமிழகத்தை சேர்ந்த சகோதரர்களே !




உங்கள் நட்பு வட்டாரத்தை நல்லவர்களோடு வைத்துக் கொள்ளுங்கள்




மது அருந்தாதிர்கள்

மது அருந்துபவர்களை அடியோடு புறக்கணியுங்கள்




ஆபாச படங்களை

உங்கள் ரூம்களில் உள்ள தொலைகாட்சிகளில்

போட, பார்க்க அனுமதிக்காதிர்கள்




விபசாரத்தில் ஈடுபாடாதிர்கள்




மனைவி என்ற பெயரில் உண்மையான மனைவிக்கு துரோகம் இழைக்காதீர்கள்




இவை அனைத்தும் செய்யும் அயோக்கியர்களோடு நட்புறவை வைத்துக் கொள்ளாதிர்கள்




என்று வேதனை கலந்த வருத்ததோடு இந்த உபதேசம் செய்கிறோம்




பிழைக்க வந்த இடத்தில் ஏன் இந்த பிழைப்பு




வேண்டாம் இந்த இறுமாப்பு




உங்களிடம் இருக்கு உழைப்பு




வேண்டும் குடும்ப பொறுப்பு




குடும்பம் உங்களிடம்

காட்ட வேண்டாம் வெறுப்பு




இதை புரிந்து கொண்டால் இருக்கு குடும்ப பொறுப்பு




உங்கள் நலனில் என்றும் அக்கறையுடன்

KUWIT நிகழ்வுகள்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-