அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
துபாய், ஆகஸ்ட் 03
சிங்கப்பூரை ஆங்கிலத்தில் FINE CITY என இரட்டை அர்த்தத்தில் (HOMOPHONE) அழைப்பார்கள், அதாவது அழகிய மாநகர் என்றும் அபராதங்கள் அதிகம் விதிக்கப்படும் நகரம் என்றும் பொருள்படும். இந்த சொல்லாடலை தமிழ் இலக்கணம் இரட்டை கிளவி என்று நமக்கு சொல்லித் தருகிறது. நிற்க!

அழகிய, நவீன கட்டிடங்களுக்கும் இதர பிரமாண்ட கட்டுமானங்களுக்கும் பெயர் பெற்ற துபை மாநகரின், துபை நிலத்துறையின் (DUBAI LAND DEPARTMENT) மனைகள் ஒழுங்குமுறை அமைப்பின் (REAL ESTATE REGULATORY AGENCY - RERA) வழிகாட்டலின் கீழ் இயங்கும் கட்டிட உரிமையாளர்கள் சங்கம் (OWNERS ASSOCIATION or MASTER DEVELOPERS) 'குடியிருப்பு கட்டிடங்கள்' தொடர்பில் குடியிருப்பாளர்களுக்கு 4 பிரிவுகளின் கீழ் 23 வகையான புதிய தண்டங்களையும் மீறல்கள் சரிசெய்யப்பட வேண்டிய கால அளவையும் அறிவித்துள்ளனர்.

பிரிவு 1: பொது மீறல்கள் என்ற பிரிவின் கீழ் அதிக சத்தம், தொல்லை, ஊழியரை அவமதித்தல், முறையில்லா வளர்ப்பு பிராணி கையாளுதல், அபாயகரமான நடவடிக்கைகள், தவறான குப்பை மேலாண்மை, வன்முறை நடவடிக்கைகள், உள்வாடகைக்கு விடுதல், சட்டவிரோதமாக பணியாளர்கள் வைத்திருத்தல், குடியிருப்பு நுழைவு கட்டுப்பாட்டை மீறுதல் ஆகிய குற்றங்களுக்கு திர்ஹம் 500 முதல் 1000 வரை தண்டம் செலுத்த நேரிடும்.

பிரிவு 2: குடியிருப்பு மற்றும் பொது உபயோகப் பகுதிகளை சேதப்படுத்துதல் மற்றும் தவறாக உபகோகித்தல் என்ற பிரிவின் கீழ் பொழுதுபோக்கு இடங்களான விளையாட்டு மைதானங்கள், நீர்நிலைகள், பூங்காக்கள், பிரத்தியேக விளையாட்டுக் களங்கள், நீச்சல் குளங்கள், செடி கொடிகள், வடிகால் அமைப்புகள், டெலிபோன் அறைகள் மற்றும் கட்டிட அமைப்புகளுக்கு சேதம் விளைவித்தால் ஒவ்வொன்றிற்கும் 500 திர்ஹம் தண்டம் செலுத்த வேண்டும்.

பிரிவு 3: வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து சட்டங்களை மீறுதல் என்ற பகுதியின் கீழ் வாகன நிறுத்த விதிகளை மீறுதல், சாலை பாதுகாப்பு மீறல் மற்றும் சாலையை தவறாக பயன்படுத்துதல், வணிகரீதியான வாகனங்களை தவறாக உபயோகப்படத்தினால் அரசின் சாலை போக்குவரத்து நிர்வாக அதிகாரிகள் (LOCAL AUTHORITIES) அழைக்கப்பட்டு அவர்களால் அபராதம் விதிக்கப்படும்.

பிரிவு 4: வீட்டை கேவலமாக பராமரித்தல் மற்றும் தோற்றமுறச்செய்தல் என்ற பிரிவின் கீழ் தோட்டங்கள் மற்றும் நிலங்களை மோசமாக பராமரித்தல், வீட்டை கேவலமான முறையில் பராமரித்தல், அனுமதியில்லாமல் வெளிப்புறங்களை ஆக்கிரமித்தல் மற்றும் வீட்டமைப்பில் மாறுதல் செய்தல், அனுமதியில்லா விளம்பர நடவடிக்கைகள், போர்டிகோ மற்றும் பால்கனிகளை தவறாக உபயோகப்படுத்தல், முறையான பூச்சி கட்டுப்பாடு (PERIODIC PEST CONTROL) செய்யாதிருத்தல் (PEST CONTROLக்கு மட்டும் அரசின் உள்ளாட்சி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்படும்) ஆகிய மீறல்களுக்கு அபராதங்கள் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Emirates247
தமிழில்: 
அதிரை நியூஸ்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-