அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சவூதியின் விஷன் 2030 எனும் தூர நோக்கத் திட்டத்தின் கீழ் ஹஜ், உம்ரா யாத்ரீகர்களுக்கும், இஸ்லாத்திற்கு சேவை செய்திடும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சுமார் 6.5 மில்லியன் உம்ரா யாத்ரீகர்கள் கடந்த உம்ரா சீசனில் வருகை புரிந்திருந்ததை தொடர்ந்து புனித ஹரம் ஷரீஃபை மிகப் பிரமாண்டமாக விரிவாக்கம் செய்திடவும், சுமார் 30 மில்லியன் யாத்ரீகர்களை ஒரே நேரத்தில் கையாளும் விதத்தில் வருடந்தோறும் படிப்படியாக அதற்கான ஏற்பாடுகளையும், வசதிகளையும் விரிவுபடுத்திக் கொண்டே செல்லும் நோக்கிலும் திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த தூர நோக்கத் திட்டத்தின் கீழ், புனிதத்தலங்களை சுற்றி தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருதல், புதிய ரயில்வே திட்டங்களை நிறைவேற்றுதல், அதிக யாத்ரீகர்களை கையாளும் வசதியுடன் புதிய பிரமாண்ட விமான நிலையம் அமைத்தல், நுணுக்கமான பாதுகாப்பு திட்டங்களுடன் தீவிரவாத சவால்களை முறியடித்தல், மருத்துவமனைகளையும் சுகாதார மையங்களையும் அதிகரித்து யாத்ரீகர்களின் உடல் நலம் பேணுதல், கழிவுநீர் அகற்றம், சுத்தம், புதிய விளக்குகள் பொருத்துவதற்கான தேவையான முன்னேற்பாடுகள் என ஹரம் ஷரீஃபின் விரிவாக்கப் பணிகளுக்கு ஏற்ப அதிகரித்தல் என பல்வேறு திட்டங்கள் முன்னுரிமையில் உள்ளன.

இதற்கிடையில் இந்த வருட புனித ஹஜ் யாத்திரைக்காக, 18 சவூதி போக்குவரத்து நிறுவனங்கள் மூலம் சவூதியை சுற்றியுள்ள நாடுகளிலிருந்து சுமார் 1.4 மில்லியன் ஹஜ் யாத்ரீகர்களை அழைத்துவர சுமார் 18,000 வாகனங்களை ஏற்பாடு செய்துள்ளன.

மேலும் சவூதி அரசும் ஏற்கனவே உள்ள பேருந்து வசதிகளுடன் கூடுதலாக 1696 புதிய பேருந்துகளை உள்நாட்டு ஹஜ் யாத்ரீகர்களுக்காக களமிறக்கியதுடன் சுமார் 24,000 இளம் ஓட்டுனர்களுக்கும் பணி வழங்கியுள்ளது.

மேலும், இந்த வருடம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1400 விருந்தினர்களுக்கு மன்னர் சல்மான் அவர்களின் அழைப்பின்; பேரில் ஹஜ் கடமையை நிறைவேற்ற வாய்ப்பு வழங்க பட்டுள்ளது.

Source: Arab News
தமிழில்:அதிரை நியூஸ்:

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-