அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...எமிரேட்ஸ் போயிங் விமான விபத்து நடைபெற்று ஒருநாள் முழுதுமாக முடிந்த பிறகும், துபாய் விமான நிலையத்தில் 200 விமானங்களின் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


துபாய்:

திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று துபாய் சென்ற எமிரேட்ஸ் போயிங் விமானம் தரை இறங்கும் போது தீப்பிடித்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக விமானத்தில் இருந்த 300 பேரும் உயிர் தப்பினர். விபத்து காரணமாக துபாய் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

பின்னர் விபத்து நடந்து 4 மணி நேரம் கழித்து விமான நிலையம், குறைந்த அளவிலான விமான சேவையுடன் இயக்கப்பட்டது.

விபத்து நடைபெற்று ஒரு நாள் ஆகியுள்ள நிலையில், இன்னும் விமான நிலையம் பழைய நிலைக்கு திரும்பவில்லை. 200-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

237 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதில் வந்து சேர வேண்டிய விமானங்கள் 116. புறப்பட்டு செல்ல வேண்டிய விமானங்கள் 121. மேலும் 44 விமானங்கள் அருகில் உள்ள விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இயல்பான போக்குவரத்து சேவை தொடர இரண்டு நாட்கள் ஆகும் என துபாய் விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-