அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... ஜெய்னுல்லாபிதீன்

முஹம்மது ஹாலித் லப்பைக்குடிகாடு. ஆகஸ்ட் 1.
பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிகாடு பகுதியை சேர்ந்தவர்கள் 3பேர் பைக் மூலம் திருச்சியிலிருந்து லப்பை குடிக்காடு  நோக்கி வந்து கொண்டு இருந்தார்கள்.  .  திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையயில் பெரம்பலூர் அருகே
மங்களமேடு  ரஞ்சன்குடி செல்லும் பாதையில் நேற்று இரவு 7:30 மணியளவில்)இருசக்கர வாகனத்தில் வந்த லப்பைக்குடிக்காட்டைச்  மூன்று இளைஞர்கள் முன்னால் சென்ற லாரியை முந்திச் சென்ற போது நிலை தடுமாறி எதிரே இருந்த பேருந்து நிறுத்த பெயர்ப் பலகையில் மோதி கீழே விழுந்தனர்.

 இரண்டு பேர் வபாத்!


இந்திய தேசியலீக் கட்சியின் லப்பைக்குடிக்காடு நகர பொருலாளருமான முஹம்மது இக்பால் அவர்களின் அன்பு தம்பி முஹமது ஹாலித் தந்தை பெயர் சர்தார்.. மற்றும் அவரது நண்பர் ஜெய்னுல்லாபிதீன்  தந்தை பெயர் அக்பர் அலி ஆகிய இருவரும்  வாகண விபத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்...! 
ஹமருல்லா த/பெ நஸ்ருல்லா என்பவருக்கு காலில் படு காயம் ஏற்பட்டது.

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீஊன்...!

சகோதரர் முஹமது ஹாலித்,ஜெய்னுல்லாபி தீன் ஆகியோர்களின் மறுமை வாழ்விற்காக இறைவனிடம் துவா செய்யுங்கள் சகோதரர்களே...! 
 மேலும் லப்பைகுடிகாடு, வி.களத்தூர் சகோதரர்கள்  பைக்கில் செல்லும்போது கவனமாக செல்லவும். ஹெல்மெட் அணிந்து பைக் ஒட்டவும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-