அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...





மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஷார்ஜா - துபாய் இடையே போக்குவரத்தை இலகுவாக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று இரு நகரங்களையும் இணைக்கும் கடலடி சாலை திட்டமும் ஒன்று என்பதை அறிவோம்.

கடந்த மாதம் நேஷனல் பெயிண்ட் அருகே மேற்படி காரணத்திற்காக ஒரு இணைப்பு சாலை திறக்கப்பட்டதையும் அறியத் தந்திருந்தோம். இந்நிலையில் எதிர்வரும் 20 ஆண்டுகளில் ஏற்படக்கூடிய வாகன நெரிசலை கருத்திற்கொண்டு சுமார் 200 மில்லியன் திர்ஹம் செலவில் 3 கட்டங்களாக 'அல் பதிஆ' (Al Badeea Project) சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த அல் பதிஆ சாலை திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்து எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பயணிகளின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படுகிறது. எமிரேட்ஸ் சாலையுடன் ஷார்ஜா மலீஹாவை இணைக்கும் இந்த சாலையால் துபாய் - ஷார்ஜா இடையேயான போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.

2017 ஆம் ஆண்டு இறுதியில் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் இந்த சாலை திட்டத்தின் அடுத்த கட்டமாக 'யூனிவர்சிட்டி சிட்டி' (University City) அருகில் ஷார்ஜா - துபாய் இடையே மேம்பாலம் ஒன்றும் அமைக்கப்பட்டு வருகிறது. மூன்றாம் கட்டப்பணிகளாக மலீஹா எமிரேட்ஸ் சாலையில் குறுக்கு சந்திப்பாக (Inter Section) அமைந்துள்ள மேம்பாலம் 7 வழிச் சாலையாக விரிவுபடுத்தப்படும்.

Source: Emirates 247
தமிழில்: அதிரை நியூஸ்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-