அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் வழக்கில் கைப்பற்றப்பட்ட 10 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 2 நான்கு சக்கர வாகனங்கள் வரும் 18ந்தேதி ஏலம் விடப்பட உள்ளது என மாவட்ட எஸ்பி.,சோனல்சந்த்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து எஸ்.பி.,அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதவது, பெரம்பலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 10 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 2 நான்கு சக்கர வாகனம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.

இந்த வாகனங்கள் பொது ஏலம் மூலம் வரும் 18ம் தேதி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளன. இ வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாள் அன்று காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை ரூ.10.000 முன் வைப்பு தொகை செலுத்தி தங்களுடைய பெயர் விலாசத்தை சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் தங்களது குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், அல்லது ஆதார் அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை நேரில் எடுத்து வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும். இதனைத் தொடர்ந்து அன்று காலை 11 மணியிலிருந்து பொது ஏலம் நடைபெறும். ஏலம் எடுப்பவர்கள். ஏலத்தொகையுடன் 14.5 சதவீதம் விற்பனை வரி தொகையினையும் சேர்த்து செலுத்தி உடனடியாக வாகனத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-