அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...










சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்படுவதையடுத்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தேசியக்கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் சுதந்திர தினவிழா நிகழ்ச்சிகள் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதா னத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்திரா முன்னிலையில், மாவட்ட கலெக்டர் க.நந்தகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண்புறாக்களையும், தேசியக்கொடியின் வண்ணத்தினாலான பலூன்களையும் கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்.பி. ஆகியோர் பறக்கவிட்டனர். பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் 14 நபர்களுக்கு கலெக்டர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

சிறப்பாக பணி புரிந்தமைக்காக 11 காவலர்களுக்கு தமிழக முதலமைச்சர் பதக்கங்களையும், 12 காவலர்களுக்கு சிறப்பான சேவை புரிந்ததற்கான சான்றிதழ்களையும், பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 126 அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு 8,000 மதிப்பிலான பரிசுத் தொகையினையும், வருவாய்த் துறையின் சார்பில் 42 நபர்களுக்கு ரூ.17.75லட்சம் மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாக்களையும், 17 நபர்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.1.38 லட்சம் மதிப்பிலும், இயற்கை மரண உதவித் தொகையாக 13 நபர்க ளுக்கு 1.78 லட்சம் மதிப்பிலும்,

மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் 1 நபருக்கு விலையில்லா தையல் எந்திரமும், 6 நபர்களுக்கு விலையில்லா சர்க்கர நாற்காலிகளையும் ரூ.28,940 மதிப்பிலும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 1000 சதுர மீட்டர் பரப்பளவில் பசுமைக்குடில் அமைக்கும் திட்டத்தின் கீழ் ஒருவருக்கு ரூ.4 லட்சத்து 67 ஆயிரத்து 500 மதிப்பிலும், வேளாண்மைத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் 10 நபர்களுக்கு ரூ.1லட்சத்து 32 ஆயிரத்து 704 மதிப்பிலும்,

கூட்டுறவுத்துறையின் மூலம் பெருங்கடன் மற்றும் நேரடிக்கடனாக இரண்டு நபர்களுக்கு ரூ.49.92 லட்சம் மதிப்பிலும், தாட்கோ மூலம் 10 சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடனும், ஒருவருக்கு மானியத்துடன் கூடிய டாடா ஏஸ் வாகனமும் என மொத்தம் 3.70லட்சம் மானிய உதவியுடன், 7.70 லட்சம் வங்கிக்கடனுக்கான ஆணைகையும் கலெக்டர் வழங்கினார்.

மேலும், மகளிர்த்திட்டத்தின் மூலம் 5 சுயஉதவிக்குழுக்களுக்கு நேரடிக்கடனும், 10 குழுக்களுக்கு ஆதார நிதி உத வியும் என மொத்தம் 15 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.11.73 லட்சம் வழங்குவதற்கான ஆணைகளையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 18 நபர்களுக்கு ரூ.66,818 மதிப்பிலான விலையில்லா தையல் எந்திரங்களையும், சமூக நலத்துறையின் மூலம் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 11 நபர்களுக்கு 5 லட்சத்து 30 ஆயிரத்து 400 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என பல்வேறு துறைகளிலும் உள்ள மக்கள் நலத்திட்டங்களின் மூலம் 171 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 18 லட்சத்து 14 ஆயிரத்து 160 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-