அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
மும்பை: இதுதான், வானத்தில் இருந்து குதித்த காமதேனுவாக இருக்குமோ என்று சந்தேகப்பட தோன்றுகிறதா.. அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் குட்டியாக நமக்கு கிடைக்க போகிறது என்று எண்ணத் தோன்றுகிறதா.. இதை.. இதைத்தான் இத்தனை காலமாக எதிர்பார்த்து காத்திருந்தோம் என்று குஷியில் துள்ளனும் போல உணர்கிறீர்களா..

இந்த அனுபவங்களை உங்களுக்கு ஏற்படுத்தும் அந்த பிராண்ட் பெயர்தான் 'ரிலையன்ஸ் ஜியோ'.

வழக்கமான சிம்கார்டுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, தமிழக தேர்தலில் கட்சிகள் வெளியிடும் கவர்ச்சி இலவச திட்டங்களை போன்ற வாக்குறுதிகளோடு களமிறங்க உள்ளதுதான் இந்த சிம்கார்டு. எனவேதான் ரிலையன்ஸ் ஜியோ பற்றி அத்தனை எதிர்பார்ப்பு. குறிப்பாக யூத்துகளுக்கு.
ஆகஸ்ட் 15ம் தேதியை சுதந்திர தினம் என்பதை மறந்து, ரிலையன்ஸ் ஜியோவின் ரிலீசிங் டே என நினைத்துக்கொண்டிருக்கிறது இந்த நாட்டின் இளைஞர் கூட்டம்.

அப்படி என்ன அள்ளித்தரப்போகிறது இந்த சிம்கார்டு என நினைக்கிறீர்களா.. வந்துள்ள தகவல்களை வரிசைப்படுத்தியுள்ளோம் பாருங்கள்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின், லைஃப் [LYF] செல்போன் வாங்கினால், முதல் 3 மாதங்களுக்கு எல்லாமே இலவசம். எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். 4ஜியில் டேட்டா டவுன்லோட் செய்யலாம். அப்லோட் செய்யலாம். வரம்பு கிடையாது. இந்த வகை போன்கள் குறைந்தபட்சம் 3 ஆயிரத்தில் இருந்தே கிடைக்கின்றன.


லைஃப் போன் இல்லாதவர்களும் சோர்ந்துவிட வேண்டாம். எந்த கம்பெனியின் 4ஜி செல்போன் வைத்திருந்தாலும் சரி, அவர்கள் ஜியோவின் 4ஜி சிம் கார்டை இலவசமாக பெறலாம்.

ஏர்டெல், வோடபோன், ஐடியா என நீங்கள் எந்த கம்பெனியின் கஸ்டமராக இருந்தாலும் சரி, உங்களுக்கு ஜியோ சிம் இலவசமாக கிடைக்குமாம். ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுவோரிடம் பழக்கம் வைத்துக்கொள்ளுங்கள் இலவச சிம் கிடைப்பது எளிது. சாம்சங்க் ஹை-என்ட் போன் வாங்குவோருக்கும் இந்த இலவச சிம் கிடைக்குமாம்.

லோக்கல், எஸ்டிடி கால்களை முற்றிலும் இலவசமாக வழங்க ஜியோ திட்டமிட்டுள்ளதாம். இதன் மூலம் பிற நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும் என்பது ரிலையன்ஸ் திட்டம். அதேநேரம், லைஃப் செல் இல்லாதவர்களுக்கு இணைய டேட்டாவுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்க ஜியோ முடிவு செய்துள்ளது.

4ஜி டேட்டா கட்டணமும் மற்ற கம்பெனிகள் நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தைவிட மிக மிக குறைவாக. சரியாக சொன்னால் 96 சதவீதம் குறைவாக இருக்குமாம். பிற 4ஜி கம்பெனிகள் 10 ஜிபிக்கு 900 முதல் 1,150 ரூபாய் கட்டணம் வசூலித்தால் ஜியோவில் அத்தனை டேட்டாக்களை வெறும் 97 ரூபாயில் பெறமுடியுமாம்.

"ஒரு செல்போன் மூலம் இத்தனையும் சாத்தியமா..? என்று மக்கள் அதிசயிக்க வேண்டும். இத்தனையும் வழங்கும் சேவைக்கு இவ்வளவுதான் கட்டணமா என்று மக்கள் ஆச்சர்யப்பட வேண்டும். அப்போது அவர்கள் எதிர்பார்க்காத மேலும் பல சேவைகளை இலவசமாக வழங்க வேண்டும். இதுதான் என் ஆசை" என்கிறார் முகேஷ் அம்பானி.

ஜியோ போட்டியை சமாளிக்க மற்ற நிறுவனங்களும் ஆஃபர்களை அள்ளி விட உள்ளனவாம். 1199 ரூபாய் பிளானிலுள்ள போஸ்ட் பெய்ட் கஸ்டமர்களுக்கு அன்-லிமிட்டெட் வாய்ஸ் கால் ஆஃபரை ஏர்டெல் அறிவித்து, இந்த போட்டிக்கு நானும் தயார் என அறிவித்துள்ளது. சுதந்திர தினம் உண்மையிலேயே கட்டண தொல்லைகளில் இருந்து சுதந்திரம் தரப்போகிறது மக்களே..

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-