அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...







புதுடெல்லி,

ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் அனைத்து பி.எஸ்.என்.எல்.வாடிக்கையாளர்கள் லேன் லைன் வாயிலாக இனி ஞாயிற்று கிழமைகளில் செய்யும் அனைத்து உள்நாட்டு அழைப்புகளும் இலவச அழைப்புகளாக கருதப்படும் என பி.எஸ்.என்.எல்.அறிவித்துள்ளது.

இது குறித்து டெல்லியில் உள்ள பாரத் சன்சார் நிகாம் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

பி.எஸ்.என்.எல். லேன் லைன் மூலம் இதர தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கு இரவு 9 மணிக்கு மேல் மாறுநாள் காலை 7 மணி வரை செய்யும் அனைத்து அழைப்புகளாக இலவச அழைப்புகளாக கணக்கிட்டு வருகிறது.

இந்நிலையில், பி.எஸ்.என்.எல்.வாடிக்கையாளர்கள் நலன் கருதி வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் பி.எஸ்.என்.எல். லேன்ட் லைன் இணைப்பு வாயிலாக நாட்டில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கும் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யும் உள்நாட்டு அழைப்புகள் யாவும் இலவச அழைப்புகளாக கருதப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுதந்திர தினத்தில் 15-ம் தேதியில் இருந்து நவம்பர் 14-ம் தேதி வரை புதிய லேண் லைன் இணைப்புகள் பெறும் வாடிக்கையாளர்களிடம் நிர்மாணக் கட்டணம் வசூலிக்கபடமாட்டாது.

வெறும் 49 ரூபாய் மாத கட்டணத்தில் இதர வாடிக்கையாளர்களை போல இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை இலவச அழைப்புகளாக இவர்களும் பெற முடியும் என அதில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-