அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர், ஆக. 9:
பெரம்பலூர் மாவட்டத்தில் கல் பாடி, வி.களத்தூர், காருகுடி, சில்லக்குடி கிராமங்களில் உணவுப் பொருள் வழங்கல் தொடர்பாக குறை தீர்க்கும் கூட்டம் வரும் 13ம் தேதி சனிக்கிழமை நடக்கிறது.
இது கு றித்து பெரம்பலூர் கலெக்டர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பொது விநியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளைகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கை மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கு சிறப்பு பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் பெரம்பலூர் வட்டம் கல் பாடி கிராமத்தில் உதவி ஆணை யர் (கலால்) பால கிருஷ்ணன், வேப்பந்தட்டை வட்டம் வி.களத்தூர் கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கள்ள பிரான், குன்னம் வட்டம் காரு குடி கிராமத்தில் மாவட்ட ஆதி திராவிடர் (மற் றும்) பழங்குடியினர் நல அலுவலர் ராஜேந்திரன், ஆலத்தூர் வட்டம் சில்லக்குடி கிராமத்தில் பொது விநியோக திட்ட துணை பதிவாளர் கிருஷ்ண சாமி தலைமை யில் உணவுப் பொ ருள் குறை தீர் கூட் டம் வரும் 13ம் தேதி நடக் கி றது.
இந்த முகாம்களில் பொது மக்கள் பங்கேற்று உணவுப் பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையலாம்.

குறிப்பு: வி. களத்தூரில் அனேகமாக  சாவடியில் (V.A.O) நடைப்பெற வாய்ப்பு உள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-