அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளில்  வரும் 15 ஆம் தேதி நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில், கிராமங்களில் செயல்படும் நியாய விலை கடைகளின் பதிவேடுகள் சமூக தணிக்கைக்குள்படுத்தப்பட உள்ளது என்றார் ஆட்சியர் க. நந்தகுமார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 15-ம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், கிராமங்களில் செயல்படும்
நியாயவிலை கடைகளின் கணக்குகள் சமூக தணிக்கைக்காக பொதுமக்கள் முன்பு வைக்கப்படும்.

எனவே, கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.  

கடைசி கூட்டம் !
வரும் அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் வருவதால் இதுதான் அந்தந்த ஊராட்சிகளில் நடைப்பெறும் கடைசிக்கூட்டம் என குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-