அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே தனியார் பேருந்து ஒன்று மினி லாரி மீது மோதியதில் 11 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர்.

விபத்து நடந்தது எப்படி?


திருச்சி துவரங்குறிச்சி அருகே இன்று பிற்பகல் மினி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. திண்டுக்கல் அம்மாபட்டியைச் சேர்ந்த 66 பேர் அந்த லாரியில் இருந்தனர். அனைவரும் திருச்சியில் உள்ள குலதெய்வம் கோயிலுக்குச் செல்லவிருந்தனர்.

வளநாடு கைகாட்டி விலக்கு ரோடு அருகே சாலையை மினி லாரி கடக்க முயன்றபோது மதுரையிலிருந்து திருச்சி நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்று லாரியின் பின்புறத்தில் மோதியது. இதில் வேன் பள்ளத்தில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது.

வேனில் இருந்தவர்களில் 11 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர். இவர்களில் இருவர் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.

சம்பவ இடத்துக்கு நேரில் வந்த மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தார்.

இச்சம்பவம் குறித்து வளநாடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-