அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி மணி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 10–ந் தேதி காலை 10.30 மணிக்கு பெரம்பலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது. இதில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு படித்தவர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். இதற்கு எவ்வித கட்டணமும் கிடையாது. இந்த முகாமில் தனியார் நிறுவனத்தினர் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்கின்றனர். தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பிற்கான பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. அரசு பணி கிடைக்கும் வரை தங்களுடைய பதிவை தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-