அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...சில பல காரணங்களால் சவுதி அரேபியாவின் தொழில் துறை தற்போது ஒரு தேக்க நிலையை சந்தித்திருக்கிறது
இதன் காரணமாக பல்வேறு தொழில் நிறுவனகங்கள் நலிவடைந்து வருகின்றன

இதன் காரணமாக பல நிறுவகங்கள் ஊழியர்களுக்கு ஊதிய பாக்கி வைத்திருக்கிறது
சில நிறுவனங்கள் இரண்டு மாத சம்பளங்கள் முதல் ஆறு மாத சம்பளங்கள் வரை பாக்கி வைத்துள்ளது
இதனால் ஊழியர்கள் பெரும் சிறமத்திற்கு உள்ளாகியுள்ளது உண்மை நிலை
இது தொடர்ப்பாக நேற்று சவுதி மன்னர் சல்மான் சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்

சவுதி அரேபியாவில் ஊதியமின்றி அல்லலுறும் ஊழியர்களின் பிரச்சசனையில் தனி கவனம் செலுத்துமாறு தனது தொழில் துறை அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார்
தேவைபட்டால் பாதிக்க பட்டுள்ள ஊழியர்களின் ஊதியத்தை அரசு சார்பில் செலுத்திவிட்டு அந்த நிறுவனங்களிடம் இருந்து அரசே அந்த தொகையை வசூலிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்
இதர்காக 100 மில்லியன் ரியால்களை விஷேச நிதியாக ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்
மேலும் நாடு திரும்ப விரும்பும் ஊழியர்களின் பயண வழிகளை இலகு படுத்துமாறும் உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்களை கேட்டு கொண்டுள்ளார்
ஊதிய பாக்கி விமான செலவு உள்ளிட்ட அனைத்தையும் அரசு செலவில் செய்து விட்டு குறிப்பிட்ட நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்
நன்றி! : சையது அலி பைஜி

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-