அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

:
துபாய், ஆகஸ்ட் 09
துபாயின் எதிர்கால கனவுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ள டிரைவர் இல்லா வாகனப் பயணத் திட்டங்களில் சுமார் 25 சதவிகிதம் வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் நடைமுறைக்கு வருவதை தொடர்ந்து மணிக்கு சுமார் 1200 கி.மீ. வேகத்தில் செல்லும் குழாய் வடிவ (Hyperloop Technology) சுரங்கவழி பயணத் திட்டத்திற்கு துபாய் அரசு கொள்கை அளவில் தயாராகி வருகிறது.

சுமார் 127 கி.மீ. தூரமுள்ள ஃபுஜைரா நகரை வெறும் 10 நிமிடத்திலும், 157 கீ.மீ தூர அபுதாபியை வெறும் 15 நிமிடத்திலும் சென்றடையும் வகையில், அமீரகத்தை முழுமையாக இணைக்க வரைவு திட்டங்கள் தயாராகி வருகின்றன.

Dubai Future Foundation சார்பாக அடுத்த மாதம் 48 மணிநேர வரைபடப் போட்டி ஒன்று சர்வதேச அளவில் புகழ்பெற்ற 6 நிறுவனங்களுக்கிடையே நடத்தப்பெறவுள்ளது.

இந்த குழாய்வழி போக்குவரத்து சாத்தியமாகும் போது சீனாவின் பெய்ஜிங் நகரிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரை 2 மணிநேரத்தில் அடைந்துவிட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: 
அதிரை நியூஸ்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-