அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 


புதுடெல்லி,

குடித்து விட்டு வாகனம் ஓட்டினால், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கவும், விபத்தில் உயிரிழப்பவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அளிக்கவும் வகைசெய்யும் மோட்டார் வாகன மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

மந்திரிசபை ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ‘மோட்டார் வாகன திருத்த மசோதா’வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதில், பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி, குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம், அதிவேகத்தில் வாகனம் ஓட்டினால் ரூ.1,000 முதல் ரூ.4 ஆயிரம்வரை அபராதம் விதிக்கப்படும்.

வாகன காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.2 ஆயிரம் அபராதமோ அல்லது 3 மாத ஜெயில் தண்டனையோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும். ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால், ரூ.2 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன், 3 மாதங்களுக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்.

சிறுவர்கள்

சிறுவர்கள் வாகனம் ஓட்டி போக்குவரத்து குற்றங்களில் ஈடுபட்டால், அவர்களின் பாதுகாவலரோ அல்லது வாகன உரிமையாளரோ குற்றவாளி ஆக்கப்படுவர். அவர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன் அந்த வாகனத்தின் பதிவு ரத்து செய்யப்படும்.

போக்குவரத்து விதிமீறல்களுக்கான ரூ.100 அபராதம், ரூ.500 ஆக உயர்த்தப்படும். அதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ்ப்படியாமைக்கான அபராதம் ரூ.500–ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும்.

உரிமம் இல்லாமல்..

உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால், ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தகுதி இழப்பு செய்யப்பட்டதை மீறி வாகனம் ஓட்டினால், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டும் குற்றத்துக்கான அபராதம் ரூ.1,000–ல் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும். வாகனங்களில் அதிக சுமைகள் ஏற்றினால், ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

சீட் பெல்ட்

காரில் ‘சீட் பெல்ட்’ அணியாவிட்டால், ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். வாகனத்தால் மோதி விட்டு நிற்காமல் சென்றால், பாதிக்கப்பட்ட
வருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். உயிரிழப்பு நேர்ந்தால், ரூ.10 லட்சம் வரை இழப்பீடு அளிக்கப்படும்.

மேற்கண்டவாறு மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

‘இந்த மசோதா, பாதுகாப்பான சாலைகளை உருவாக்கவும், அப்பாவிகளின் உயிரை காக்கவும் வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை. இதன் மூலம், 50 சதவீத விபத்துகளை குறைக்க அரசு உறுதி பூண்டுள்ளது’ என்று மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி கூறினா

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-