அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
சவுதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் நிலை காரணமாக பல கம்பெனிகள் தமது பணியாளர்களை கனிசமான அளவு குறைத்துள்ளதுடன் சில கம்பெனிகள் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கவும் மிகவும் திண்டாடுகிறது.
அந்த வகையில் மிகவும் சிக்கலான நிலையில் சவுதி பின்லாடன், சவுதி ஓஜர் நிர்வாகத்தினர் தள்ளப்பட்டனர். இரு கம்பெனிகளும் சவுதியில் கட்டிட வேலைப்பாடுகளை மேற்கொள்வதிலும் கட்டிட பராமரிப்பு வேலைகளில் ஈடுபடுவதிலும் மிகவும் பிரபல்யமானவையாகும்.


கடந்த கால பொருளாதார சிக்கல் நிலைகளினால் இவ்விரு கம்பெனிகளின் பல்வேறு வேலைத்தளங்களுக்கான கொந்தராத்துகள் சவுதி அரசினால் இரத்து செய்யப்பட்டதால் தமது பணியாளர்களுக்கு ஆறு மாதம் தொடக்கம் எட்டு மாதங்கள் வரை ஊதியம் வழங்கப்படாமல் இருந்து வந்தனர்.
இதன் காரணமாக இரு கம்பெணிகளின் பணியாளர்களும் பல்வேறுபட்ட போராட்டங்களை நடத்திவந்தனர், கடந்த வாரம் ஜித்தாவிலுள்ள சவுதி ஓஜர் கம்பனிப்பணியாளர்கள் மக்கா – மதீனா அதிவேக பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர், இதனை தொடர்ந்து அங்கு வருகை தந்த நூற்றுக்கும் அதிகமான பொலிசாரின் நடவடிக்கையை அடுத்து அவர்கள் மக்கா – மதீனா அதிவேக பாதையை விட்டகன்று தமது கம்பெனிக்கு முன்னால் உள்ள வீதியை மறித்து போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டங்களின் முடிவாக தற்போது, சவுதி பின்லாடன், சவுதி ஓஜர் கம்பெனியிலுள்ள எந்தவொரு பணியாளரும் ”அக்காமா” இல்லாதவர் உட்பட தாம் விரும்பும் கம்பெணியில் உடனடியாக சேர்ந்து பணியாற்ற சவுதி அரசு அனுமதியளித்துள்ளதுடன் இப்பணியாளர்களை ஏற்றுக்கொள்ளும் கம்பெனிகளுக்கு எந்தவிதமான கட்டணங்களும் இன்றி இலவசமாக இவர்களின் ”தனாசில்” செய்வதற்கும் சவுதி அரசு இன்று முடிவெடுத்துள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-