அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
நோன்புப் பெருநாள் விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டதை அடுத்து வெளிநாடுகளிலிருந்து தொழிலுக்காக  கத்தாரில் வசிக்கும் வேலையாட்கள் தத்தமது நாடுகளுக்கு அதிகமதிகம் திரும்புகின்றனர். இதனால் கத்தார் விமானநிலையம் நம்நாட்டு  பெட்டா போல காட்சி தருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இது மாத்திரமின்றி விமான நிலையத்தைச் சூழ போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் வழியனுப்ப வரும் ஏனையோருக்கும் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு துரத்தப்படுவதாகவும் தெரிவித்தார். தயவு செய்து வழியனுப்ப செல்பவர்கள் கத்தாரில் வசிக்கும் நம் நாட்டவர்கள் அங்கு வாகனத்தரிப்பிடம் மற்றும் உள்நுழைய அனுமதியிலை என்பதை கருத்திற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த நிலை ஒரு சில தினங்களுக்கு நீடிக்கும்  (ஈத் பெருநாள் வரை)என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் தீவிரவாதிகளின் ஊடுருவல் கட்டாருக்குள் புனித ரமழானில் அதிகரிக்கும் என அமெரிக்கா எச்சரித்திருந்ததும்  குறிப்பிடத்தக்கது.
கட்டாரில் இருந்து எமது விசேட செய்தியாளர் நௌசாத்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-