அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


ஒரு சொத்தை வாங்கும் போது அனைவரும் தவிர்க்க விரும்பும் ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத விஷயம் ஆவனங்கள்.

எனினும் இது சொத்துப் பரிமாற்றத்தில் ஒரு முக்கிய பகுதி என்பதால் இதைப் பற்றிய அறிவையும் விழிப்புணர்வையும் வீட்டைத் தேடுவதற்கு முன் நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.


என்ஆர்ஐ-க்கான விதிகள் எளிமை


முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ரிசர்வ் வங்கி என்ஆர்ஐ-க்களுக்கு சொத்துச் சந்தையில் முதலீடு செய்யும் வகையில் விதிகளை எளிமையாக்கியுள்ளது.


ஆவனங்கள் ஒன்று தான் ஆனால்...


எனவே ஒரு சாதாரண குடிமகனைப் போலவே என்ஆர்ஐ-க்கு தேவையான ஆவனங்கள் ஒன்று தான் என்றாலும் சில ஆவணங்கள் சற்று வேறுபடுவதால் அவற்றை தயார் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

சொத்து விற்கும்போது என் ஆர் ஐக்களுக்குத் தேவைப்படும் ஆவனங்களின் பட்டியல் பற்றி இங்கு பார்க்கலாம்.
பாஸ்போர்ட்


இந்தியாவில் உள்ள தன் சொத்தை விற்க விரும்பும் ஒரு என்ஆர்ஐ-க்கு ஒரு பாஸ்போர்ட் அவசியம். அது இந்தியாவினுடையதோ அல்லது வேறு ஒரு நாட்டினுடையதோ. இது இந்த பரிவர்த்தனையில் ஈடுபடும் நபரின் அடையாளாச் சான்றாக அமையும்.

வெளிநாடு வாழ் இந்தியருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கும் கூட இந்த பாஸ்போர்ட் அதே போன்று உதவியாக இருக்கும்.
பான் கார்டு


பல என்ஆர்ஐ-க்கள் வெளிநாடுகளில் வருமானம் ஈட்டி அந்தந்த நாடுகளில் வரி செலுத்துவதால் இந்தியாவில் வரி செலுத்துவதில்லை.

எனினும் இந்தியாவில் ஒரு சொத்தை வாங்க விரும்பினால் இவர்களும் ஒரு பான் எண்ணை விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளவேண்டும் ஏனெனில் இது அவர்களுக்கு வரிவிலக்கு சான்றிதழைப் பெற உதவும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

இவர்களுக்கான பான் கார்டு வெளிநாட்டு முகவரியுடன் வழங்கப்படுகிறது (குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும்)
வரி விவரத் தாக்கல் (ரிட்டர்ன்ஸ்)


ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் (என் ஆர் ஐ) இந்தியாவில் சொத்தை வைத்திருந்தால் அவற்றிலிருந்து வரும் வாடகை போன்ற வருமானம் வரிவிதிப்பிற்குட்பட்டது. எனவே இந்த சொத்துரிமை காலத்திற்குத் தேவையான வரி விவரங்களை வைத்திருக்க வேண்டியது அவசியம்.


முகவரிச் சான்று


ஒரு என் ஆர் ஐ தன்னுடைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முகவரிக்குச் சான்றாக ஆவணங்களை தர வேண்டியது அவசியம். குடும்ப அட்டை, தொலைபேசி மற்றும் மின் இணைப்பு ரசீதுகள், எல்ஐசி பாலிசி ஆகியவை இதில் அடங்கும். வெளிநாட்டில் உள்ள முகவரிக்கு இது பொருந்தும்.


விற்பனை பத்திரம்


ஒரு முக்கிய விற்பனை ஆவனமாகிய இது ஒரு சொத்தின் உரிமையை நிலை நாட்டும் ஆவனம் ஆகும். இந்த சட்டபூர்வமான ஆவனம் ஒரு என்ஆர்ஐ இந்தியாவில் சொத்தை வாங்க செய்துகொள்ளும் ஒப்பந்தப் பத்திரம் ஆகவும்.


ஒதுக்கீட்டு ஆணை


வீடு அல்லது சொத்தை ஒருவருக்கு ஒதுக்கப்பட்டதற்கான கடிதம் சொத்துரிமையை நிலை நாட்டும் மற்றுமொரு ஆவனம் (அது சங்கமோ, ஒரு கட்டுமான நிறுவனமோ அல்லது அல்லது அதிகாரியோ தந்ததாக இருக்கலாம்).


கூட்டுறவு சங்கத்தின் ஆவனம்


ஒரு கூட்டுறவு சங்கத்தில் வாங்கப்படும் வீட்டிற்கு அந்த சங்கம் அல்லது குடியிருப்பு நிர்வாகத்திடம் ஒரு கடிதம் இந்த விற்பனைக்காகத் தேவைப்படும்.

இந்த கடிதம் விற்பனை செய்பவர் சங்கம் அல்லது குடியிருப்பிற்கு செலுத்த வேண்டிய நிலுவை எதுவும் இல்லை என்பதை தெரிவிக்கிறது. இந்த சங்கத்தின் உறுப்பினர் அட்டையும் சொத்தின் மீதான உரிமைக்கு நல்ல ஒரு சான்றாகும்.
வீட்டு வரைபடம் மற்றும் குடியேற்றச் சான்று


ஒரு அனுமதி பெற்ற வீட்டு வரைபடம் மற்றும் ஒரு குடியேற்றச் சான்று (ஆக்குபேஷன் சர்டிபிகேட்) வீட்டில் குடியேறுவதற்காக உரிமையாளருக்கு சங்கம் அல்லது கட்டுமான நிறுவனத்தால் வழங்கப்படும். இது ஒரு சொத்தை விற்பனை செய்ய அவசியமான ஒரு ஆவனமாகும்.


வில்லங்கச் சான்று


ஒரு சொத்து எந்த வித நிலுவையும் இல்லாமல் உள்ளது என்பதை கூறும் வில்லங்கச் சான்று முக்கிய ஆவனம். ஒரு வீடு, அடுக்குமாடிக் குடியிருப்பு அல்லது ஒரு காலி மனைக்கு பொருந்தும்.

இந்த ஆவணங்களைத் தவிர ஒரு என்ஆர்ஐ-க்கு வரி ரசீதுகள் கூடாது தேவைப் படலாம். ஏனென்றால் ஒரு எச்சரிக்கையாக வாங்குபவர் இதை கேட்கக் கூடும்.
ஆவணங்களில் ஏதேனும் இல்லை எனில்


ஒரு என்ஆர்ஐ மேற் கூறப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளிக்க முடியவில்லையென்றால் அவர் ஒரு வழக்கறிஞரை சந்தித்து அவரிடம் ஒரு சொத்துரிமை சான்றை பெறலாம்.

அந்த சொத்தின் உரிமை மீதான ஆய்வை மேற்கொண்டு அவர் ஒரு அறிக்கையை தருவார். இந்த சான்று விற்பனைக்கு ஏற்றுக்கொள்ளப் படும் என்றாலும் விற்பனைக்கு அசல் பத்திரம் அவசியம்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-