அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
இது எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் யாருக்குவரக்கூடாதுன்னுதான் இதை எழுதுகிறேன் இதை அதிகம் சேர்செய்து எல்லோருக்கும் தெரியபடுத்துங்கள்
29ம்தேதி என்மகளுக்கு ரொம்பமுடியாமல் போய்விட்டது மஞ்சள்காமாலை இருந்ததால் மயக்கநிலைக்கு போய்விட்டால்
உடனே எங்கள் குழந்தைநல டாக்டருக்கு போன்பன்னி கேட்டதுக்கு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்று குளுக்கோஸ்

ஏற்றுங்கள் என்றார்.உடனே அருகில் உள்ள டாக்டரிடம் கூட்டி சென்று காண்பித்தோம் உடனே அவர் ஒரு ஊசி போட்டார்
நாங்கள் குளுக்கோஸ் ஏற்ற சொன்னோம். குளுக்கோஸ் ஏற்ற ஆரம்பித்தார்கள் 5நிமிடத்தில் இதற்குமேல் ஏற்றமுடியவில்லை
உங்கள் மகளுக்கு மூளையில் பாதிப்பு ஆகிருக்கு அதனால் முதுகு தண்டுவடத்திதை ஸ்கேன்செய்யவேண்டும் அதனால் பெரிய ஆஸ்பத்திரியில்தான் அந்த வசதி இருக்கும் நீங்கள் மியாட்,குளோபல், சரஸ்வதி ஏதாவது ஒன்றுக்கு போங்கள் என்று சொன்னார்.
நாங்கள் அவரிடமே நல்ல ஆஸ்பத்திரிக்கு அனுப்புங்கள் எனகேட்டதுக்கு குளோபலுக்கு போகசொல்லி எழுதி கொடுத்தார்
நாங்கள் உடனே கால்டாக்ஸியில் என்மகளை அழைத்துக்கொண்டு குளோபலுக்கு போனோம்

அங்கு அவசர சிகிச்சைக்கு போனோம் அங்கு உடனே எல்லா டெஸ்டும் எடுத்தார்கள் 1மணிநேரத்தில் என்மகள் பேச ஆரம்பித்துவிட்டாள்
எங்களை வெளியில் உட்கார சொன்னார்கள் சிறிது நேரம் கழித்து ஒருடாக்டர்வந்து உங்கள் மகள் கோமாநிலைக்கு போய்விட்டாள்ன்னு

சொன்னார். என்மனநிலை எப்படி இருந்திருக்கும் நினைத்து பாருங்கள். அவர்கள் அவ்வாரு சொன்னதும் பெத்தவங்க நிலைமை எப்படி இருக்கும்
அவர்கள் உடனே ICUவுக்கு கொண்டுபோகனும்ன்னு கட்டாயபடுத்தினார்கள்.
நாங்களும் வேறு வழிதெரியாமல் சரின்னு சொன்னோம்.

சற்று நேரத்தில் 30ஆயிரம் பணம் கட்டுங்கன்னு சொன்னாங்க அதை உடனே கட்டினோம்

சற்று நேரத்தில் ICUவுக்கு மாற்றிவிட்டார்கள்.

சிறிது நேரம் கழித்து டாக்டர் கூப்பிடுகிறார்ன்னு சொன்னாங்க அங்கு பேரதிர்ச்சி காத்திருந்தது

டாக்டரிடம் நாங்கபோனோம் அவர் எங்களிடம் உங்கள் மகளுக்கு லிவர் பெயிலியர்ன்னு சொன்னார்

நாங்க அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

மஞ்சள்காமாலை ஆரம்பித்து 2நாளில் எப்படி லிவர் எப்படி பாதிக்கும்ன்னு கேட்டதுக்கு சிலருக்கு இப்படித்தான் சடனா பாதிக்கபடும்ன்னு சொன்னாங்க. அடுத்துநடந்ததுதான் இன்னும் கொடுமை

சிறிதுநேரம் கழித்து என்மகளை பார்த்த டாக்டர் வெளியேவந்தார் அவர் எங்களிடம் உங்க மகள் 2நாள் ICUவுல இருக்கனும்
அதற்குபிறகுதான் எதையும் சொல்லமுடியும்ன்னு சொன்னார் இப்ப எப்படி இருக்காள்னு கேட்டதுக்கு critical situationனு சொன்னார்.

நாங்கள் வெளியில் காத்திருந்தோம்.

15நிமிடம் கழித்து உள்ளேகூப்பிடுகிறார்கள்னு சொன்னாங்க நான் போனேன் அங்கு ஒருவர் எனக்கு கவுன்சிலிங்க் பன்னுனார்(கவுன்சிலிங்க்னா என்னன்னு இவனுங்களுக்கு தெரியாது போல) எடுத்ததும் ஒருநாளைக்கு 1.5லடம் ஆகும் நீங்க பணம் ரெடிபன்னுங்கன்னு சொன்னார் எனக்கு ஒன்னுமேபுரியவில்லை
மகளை காப்பாற்றவேண்டுமே அந்த ஒரு என்னம் மட்டும்தான் மனதில் இருந்தது.

தெரிந்தவர்களிடம் பணம் கிடைக்குமான்னு போன்செய்து கேட்க ஆரம்பித்தேன். என்மகளை அங்கு சேர்க்கும்முன் பேஸ்புக்கில் ஒருபதிவுபோட்டேன்

யாராவது தெரிந்த டாக்டர்கள் அங்கு இருக்கிறார்களா என்று.
நேரம் போய்கொண்டே இருந்தது 4மணிக்கு உள்ளே கூப்பிட்டார்கள் திரும்பவும் கவுன்சிலிங்க் அங்கு இருந்தவர் நீங்கள் தினசரி 2லட்சம் கட்டவேண்டும்ன்னு சொன்னார் எனக்கு ஒன்னும் புரியவில்லை. பேசிவிட்டு வெளியே வந்துவிட்டேன் தெரிந்த முகநூல் நண்பர்களுக்கு பேச ஆரம்பித்தேன்.சில உதவிகள் கிடைக்க ஆரம்பித்தது.திரும்பவும் 7மணிக்கு என்னை உள்ளே கூப்பிட்டார்கள் இங்கு இன்னும் அதிர்சி காத்திருந்தது.
7மணிக்கு கூப்பிட்டு நீங்க தினசரி 2.5லட்சம் கட்டவேண்டும்ன்னு சொன்னாங்க நான் உடனே முதலில் 1.5 சொன்னிங்க அப்புறம் 2சொன்னிங்க இப்ப 2.5லட்சம் சொல்லுறிங்களேன்னு கேட்டதுக்கு ICUவுல இருக்கிறவங்களுக்கு திடிர் திடிர்ன்னு சிகிச்சை மாரும் அதற்குதகுந்தவாறு மெடிசன் கொடுக்கனும் என்று சொன்னார்கள்.
நான் ஏழை என்னால் அவ்வளவு கட்டமுடியாது என்று சொன்னதுக்கு உங்கள் மகளைகாப்பாற்றவேண்டுமானால் பணத்துக்கு ஏற்பாடுபன்னுங்கன்னு சொன்னார்

நான்வேறவழி தெரியாமல் நாளை மதியம் 2மணிக்குள் 2.5லட்சம் கட்டுவதாக சொல்லிவிட்டு வந்தேன்

வெளியில் வந்து சிகிச்சை கொடுக்கும் டாக்டரிடம்பேசினோம்
அவர் 24மணிநேரம் ICUவுல இருந்தால்தான் அதன்பிறகு என்ன என்பதை சொல்லமுடியும்ந்னு சொன்னார் சரி ஆகிடுமான்னுகேட்டத்துக்கு

ஒன்னும் சொல்லுறதுக்கில்லைன்னு சொல்லிவிட்டார்.

8மணி ஆகிவிட்டது அங்கு ஒருவர்தான் தங்கமுடியும் அதனால் எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு நான் மட்டும் இங்கு இருந்தேன்
8.30மணியளவில் பில் செக்சனில் கூப்பிடுவதாக சொன்னார்கள்.போனேன் அங்கிருந்தவர் என்னிடம் நீங்க உடனே 2.5லட்சம் கட்டுங்கள் என்று சொன்னார்

நான் நடந்ததை சொல்லி நாளை கட்டுவதாக சொன்னேன் அதற்கு அவர் நீங்கள் பணம் கட்டினால்தான் மேற்கொண்டுசிகிச்சைக்கு மெடிசன் அனுப்பமுடியுன்னு சொன்னார் இவ்வளவுநேரம் கழித்து இப்ப உடனே 2.5கட்டசொன்னால் நான் இந்த ராத்திரிநேரத்தில் எங்குபோவேன்னு கேட்டேன்.
அவர்யாருக்கோ போன்பன்னிவிட்டு என்னிடம் சரி நீங்க இப்ப செக்கொடுங்கன்னு கேட்டார். நான் உடனே பிள்ளையை ஆஸ்பத்திரிக்கு கூட்டி வரும்போது

செக்புக்கோடவா வருவாங்கன்னு கேட்டேன் கண்டிப்பாக செக்கொடுக்கவேண்டும்ன்னு சொல்லிவிட்டார்.

நான் வேறவழி இல்லாமல் தெரிந்த ஒருவருக்கு போன்பன்னி அவரை எங்கள் வீட்டில்போய் செக்வாங்கிட்டுவரசொன்னேன்
அந்த ராத்திரியில் அவர் 20கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வந்து எங்கள் வீட்டில் இருந்து செக்வாங்கிவந்தார்

10.30மணிக்கு செக்கை கொண்டு கவுண்டரில் கொடுத்தேன் செக்கை பார்த்துவிட்டு சிண்டிகேட்பேங்க் செக்கா என இளக்காரமாக பதில் வந்தது

நான் எனக்கு எங்கு அக்கவுண்ட் இருக்கிறதோ அந்த பேங்க் செக்தானே கொடுக்கமுடியும்ன்னு சொன்னேன் யாருக்கோபோன்பன்னிபேசிவிட்டு

செக்கொடுத்ததுக்குய் ஒருகவரிங்க் லட்டரும் வாங்கிகிட்டாங்க.
அடுத்தநாள் நடந்த

மீதி சுவார்யசமான விஷயம் அடுத்ததில் எழுதுகிறேன்

முக்கியமான விஷயத்தை விட்டுவிட்டேன் அவர்கள் செய்த கவுன்சிலிங்கில் அவர்கள் சொன்னது உங்கள் மகளுக்கு லிவர் பெயிலியர் ஆனதால் நீங்க மாற்று லிவர் பொருத்தவேண்டும் என பயம்காட்டினார்கள்.

அதற்கு மொத்தத்தில் 50லடசம் செலவாகுமாம்

மறுநாள் விடிந்தது நான் ஆஸ்பத்திரியில் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தேன்.நிறைய நண்பர்கள் போன்செய்துபேசினார்கள்

நிறையபேர் கேட்டது ஏன் இந்த ஆஸ்பத்திரிருக்குவந்திங்கன்னுதான்.
அதற்குள் ஒரு பெரிய உதவிகிடைத்தது

என்மகள் எப்படி இருக்கிறாள்னு யாரும் பதில் சொல்லமாட்டேங்கிறாங்க

முநூல் நண்பர்க்ள் சிலர் உதவியால் சில டாக்டர்கள் அங்கு பேசினார்கள் அந்த டாக்டர்களுக்கு இந்த மருத்துவமனையில் இருந்து சரியான பதில் சொல்லவில்லை.
9மணிக்கு என்மகளை பார்த்த டாக்டர் வந்தார் அவரிடம் கேட்டதுக்கு இன்னும் இரண்டுநாள் ICUவில் இருக்கவேண்டும் எனசொன்னார் சரி என்மகளை நான் பார்க்கனுன்னு சொன்னதுக்கு மாலை 5மணிக்குத்தான் பார்க்கமுடியும்ன்னு சொல்லிவிட்டார்.

செய்வதரியாது இருந்தேன் இனிபணம் ஏற்பாடுசெய்யவேண்டுமே என என்னுடைய அண்ணனையும் என்மனைவியையும் ஆஸ்பத்திரியில் விட்டுவிட்டு(அவர்கள் காலையில் 9.30க்கு ஆஸ்பத்திரி வந்துவிட்டார்கள்)நான் வீட்டுக்கு வந்துவிட்டேன்

வந்து இருந்தநகையை 1லட்சத்துக்கு அடகுவைத்து

ஒருநண்பரிடம் 1.5லட்சம் வாங்கிகொண்டு கிளம்பலாம்ன்னு இருக்கும்போது என்மனைவி போன்பன்னி ரத்தம் தேவைபடுகிறதாம் ஏற்பாடுபன்னவேண்டுமாம்ன்னு டாக்டர் கூறுவதாக சொன்னார்.நான் உடனே விஜயகுமார்A,கீர்த்திவாசன்,கிருஷ்ணதாசனுக்கு போன்பன்னி விஷ்யத்தை சொல்லி ரத்தம்தேவைபடுவதாக பதிவுபோடுங்கள் எனசொன்னேன்
அவர்கள் உடனே பதிவுபோட்டுவிட்டார்கள்.நான் வீட்டில் இருந்து ஆஸ்பத்திரிக்கு செல்வதற்குள் 50போனுக்குமேல் வந்தது

எப்ப எங்கே ரத்தம்கொடுக்கவரவேண்டும் எனகேட்டு போன்மேல்போன்.

நான் ஆஸ்பதிரிக்கு போகுமுன் 4பேர் ரத்தம் கொடுக்க வந்துவிட்டார்கள்.

கவுன்சிலிங் தொடருது.

நான் அங்குபோனதும் என்னை கூப்பிட்டார்கள் மீண்டும் கவுன்சிலீங்க் உங்கள் மகள் 10நாள்ICUவில் இருக்கவேண்டும் அதற்கு 25லட்சம் ஆகும் அதன் பின் மாற்று அருவைசிகிச்சை செய்ய 30லட்சம் ஆகும் அதன் பின் 7லட்சம் ஆகும் பணம் ரெடிபன்னுங்கன்னு சொன்னார்கள்.அங்கு கவுன்சிலிங்க் முடிந்து கீழேவந்தால் திரும்பவும் இன்னொருத்தர் கூப்பிட்டார் அவர்கள் கேட்டது எப்பபணம் ரெடிபன்னுறிங்க அதுமட்டும்தான் நானும் பிடிகொடுக்காமல் என்னிடம்பணம் இல்லை என்பதை திரும்பதிரும்ப சொல்லிவந்தேன் திரும்பவும் மேலே கூப்பிட்டார்கள் அங்கிருந்த டாக்டர்கள் லிவர்பெயிலியர் ஆகிவிட்டது எப்படியும் மாற்றுலிவர்தான் பொருத்தவேண்டும் அதற்கு டோனர் யாராவது ஏற்பாடு பன்னுங்கன்னு சொன்னாங்க உடனே நான் நானே கொடுக்கிறேன்னு சொன்னேன்

அதற்கு அவர்கள் ஒரே ரத்தமா இருக்கனும்ன்னு சொன்னாங்க எனக்கும் என்மகளுக்கும் ஒரே ரத்தம்தான்ன்னு சொன்னதுக்கு உங்களுக்கு ஒரு டெஸ்ட்பன்னுவோம் அது OKயா இருக்கனும் அப்படியில்லைன்னா 2லட்சம் உங்களுக்கு வேஸ்டா செலவாகும் என்று மிரட்டல்வேறு

ரத்தம் கொடுக்க ஆட்கள் வந்துகொண்டே இருந்தார்கள் அதற்குள் பில்கட்ட சொல்லி போன்வந்தது. கவுண்டரில் 2.5 லட்சம் கட்டினோம்

ஆனால் என்மகளை பார்க்க அனுமதியில்லை. திரும்பவும் கவுன்சிலிங்.

நாங்கள் எனது மகளை வேற ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோக தீர்மானித்து அதற்கான வழிகளை தேட ஆரம்பித்தோம்

டாக்டர்களிடம்பேச மாவட்ட வியாபாரிகள் சங்கதலைவர் வந்தார் அவரிடமும் சரியான விளக்கம் சொல்லவில்லை.

எனக்கு உதவ எங்கள் குலதெய்வமே நேரில் வந்தது.

ஆஸ்பத்திரிக்கு மேல் இடத்துல இருந்து பிரசர் கொடுக்க ஆரம்பித்தோம்

மேலிடத்து பிரசர் பார்த்து கொஞ்சம் இறங்கிவந்தாங்க எங்களை கவுன்சிலிங்க் கூப்பிட்டு

இனி உங்களுக்கு 1.5லட்சத்தில் இருந்து 2லட்சம் ஆகும்ன்னு சொன்னாங்க(2.5 ஆகும்ன்னு சொல்லிருந்தாங்க)

சரி பிள்ளையை பார்க்கனும்ன்னு சொன்னதுக்கு சாயங்காலம் 5மணிக்குத்தான் பார்க்கமுடியும்ன்னு சொல்லிட்டாங்க

ஆப்பிரேஷன் இல்லாமல் காப்பாற்றுங்கன்னு சொன்னதுக்கு அது இன்னும் 10நாள் கழித்துதான் சொல்லமுடியுன்னு சொன்னார்.

முநூலில் உள்ள நிறையபேர் ரத்தம்கொடுக்க வந்துகொண்டே இருந்தார்கள்.ரத்தம் எடுக்கும் இடத்தில் இருந்தவர்கள் இந்தபிள்ளைக்கு இவ்வளவுபேர் ரத்தம் கொடுக்கவர்றாங்களான்னு ஆச்சர்யபட்டார்கள் நாங்க இன்னும் எவ்வளவு ரத்தம் வேண்டும்ன்னு கேட்டதுக்கு எவ்வளவுன்னாலும் பரவாயில்லை ஆட்களை வரச்சொல்லுங்கன்னு சொன்னாங்க நாங்க கொஞ்சம் உசாரானோம். என்மகளுக்கு ரத்தம்தேவைன்னு பொய்சொல்லிருக்கானுங்க எங்களுக்கு ஆஸ்பத்திரியில ஏமாற்றுறாங்கன்னு

தோன ஆரம்பிச்சதும் ரத்தம் கொடுக்கவந்தவர்களை திருப்பி அனுப்ப ஆரம்பிச்சோம். அதற்குள் 25யூனிட்டுக்குமேல் ரத்தம் சேர்ந்துவிட்டது

பெரியலெவலில் உள்ள டாக்டர்கள் பேச ஆரம்பித்ததும் இவங்க வேற ஆஸ்பத்திரிக்கு போய்விடுவார்களோன்னு நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க

எனினும் முடிந்த அளவு நம்மிடம் இருந்து பணம் புடுங்க நினைச்சிருக்காங்க.

எங்களுக்காகபேசிய டாக்டர்களிடம் இந்த பிள்ளைக்காக நீங்க ஏன் வர்றிங்கன்னு கேட்டிருக்காங்க

அவங்க எங்க சொந்தக்கார பிள்ளைக்காக நாங்க வரத்தான் செய்வோன்னு சொன்னபிறகு அடங்கிருக்காங்க

திரும்பவும் கவுன்சிலிங்க் கூப்பிட்டாங்க.

இப்பதான் சொல்லுறாங்க உங்கமகள் இங்குவந்துக்கு 20சதவீதம் சரியாகிருக்காள்ன்னு

இனி என்ன செய்யனும்ன்னு கேட்டதுக்கு 1வாரம் ICUவுல இருக்கனும் அதன்பின் மாற்று அருவைசிகிச்சை பன்னனும்ன்னாங்க திரும்பவும்முதல்ல இருந்து

ஒன்னு புருஞ்சிகிட்டேன் அவங்களுக்குள் கம்யூனிகேசன் சரியாயில்லை ஆளாளுக்கு ஒன்னு சொல்லுறாங்கன்னு

மணி 5க்குமேல ஆச்சி நண்பர்கள் நிறையபேர் வந்திருந்தாங்க

ICUவுக்கு யாராவது 2பேர்தான் போகனும் என்னிடம் இருந்தபாஸை நம்ம டீச்சர் ஸ்ரீமதிகோலப்பன் வாங்கிகிட்டுபோய் பார்த்துவிட்டு என்மகளை ICUவுலபோய்பார்த்துட்டுவந்தாங்க அப்புறம் நான் போனேன் அங்கிருந்த நரஸ்ஸிடம் என்மகள எப்படி இருக்கான்னு கேட்டேன்

அதர்க்கு அவர் கடவுளை வேண்டிக்கங்கன்னு சொன்னார் ஒன்னுமே புரியவில்லை ICUவுல ரமணா படத்துல வருகிறமாதிரி பெரிய பெரிய மிஜின் வச்சிருந்தாங்க

என்மகளை மயக்கநிலையிலயே வச்சிருந்தாங்க பெத்த மனசு எப்படி இருந்திருக்கும் நினைத்துபாருங்கள்.

மணி 6 ஆச்சி எனக்கு ஆஸ்பத்திரியில இருந்துபோன் ஹரிகரன்னு ஒருத்தர் பேசினார் இன்னும் 1.5 லட்சம்கட்டனும் எப்ப கட்டுறிங்கன்னு கேட்டார்

நான் இப்பதானே 2.5 கட்டினேன்னு சொன்னதுக்கு அது நேற்று கொடுத்து டிரிட்மெண்ட்டுக்கு இன்னைக்கு உள்ளதுக்கு எப்பகட்டுறிங்கன்னு கேட்டார்

என்னசெய்வதுன்னு தெரியாமல் குழப்பதில் நாளை மதியத்துக்குள் கட்டிவிடுகிறேன்னு சொன்னேன் அவர் சரி சீக்கிரம் கட்டுங்கன்னு சொன்னார்.

சூர்யா அவருடைய அத்தை மூலமாக டாக்டர்களிடம் பேசினார் .

டீச்சர்,கிருஷ்ணதாசன்,சூர்யா எல்லோரும் 8மணிவரை இருந்துவிட்டு கிளப்பினார்கள்

அவர்கள் கிளம்பிசென்றதும் நாம் மாடியில்போய் உட்கார்ந்தேன்

5நிமிடத்தில் ஸ்பீக்கரில் என்னை பில்செக்சனுக்கு வரச்சொல்லி அழைப்புவந்தது உடனே அங்கு போனேன் திரும்பவும் அதிர்ச்சி காத்திருந்தது

அங்கு மனசாட்சியே இல்லதவனுங்க இருந்தானுங்க அந்த ராத்திரிநேரத்தில் உடனே 1.5லட்சம் கட்டுங்கன்னு சொன்னானுங்க

நான் இப்பதானே போனில் பேசியவர்கிட்ட நாளைகட்டுவதாக சொன்னதை சொன்னேன் நாங்கதான் பில் செக்சன் நாங்க சொல்லுறதைத்தான் நீங்ககேட்கனும்ன்னு மிரட்டல் என்னால் நாலைதான் கட்டமுடியும்ன்னு சொன்னதுக்கு நீங்க உடனேபணம் கட்டுனாதான் சிகிச்சயை தொடரமுடியும்ன்னு சொன்னான் அந்த ஆள்.

அதற்குமுன் எங்களிடம் கவுன்சலிங் பன்னுனவங்ககிட்ட உங்க சீப் கிட்ட கூட்டிட்டுபோங்கன்னு சொன்னதுக்கு ஒருவனிடம் கூட்டிபோனானுங்க

அங்கு முகமதுபாருக்னு ஒருத்தர் இருந்தார் அவர்தான் சீப்பாம் அவர் எங்களிடம் பணம் ஏற்பாடுபன்னுங்கன்னு சொன்னார் என்னநோய்ன்னு கேட்டதுக்கு

லிவர் பெயிலியர்ன்னு சொன்னார் எப்படி ஆச்சின்னு கேட்டதுக்கு தண்ணிர்னால வந்திருக்கும்ன்னு சொன்னார் முன்னாடிவேறமாதிரி சொன்னிங்களேன்னு கேட்டதுக்கு நாங்க இப்பதான் இன்வஸ்டிகேசன் பன்னிகிட்டு இருக்கோன்னு சொன்னார் அப்ப என்னவிதமான சிகிச்சை கொடுக்கிறிங்கன்னு கேட்டதுக்கு பதில் இல்லை அவரும் 10நாள் ICUவுல இருக்கனும் அதன்பின் லிவர்மாற்று அருவைசிகிச்சைபன்னனும்தான் சொன்னார்

அதற்கு மொத்தத்தில் 70லட்சம் பட்ஜட் போடுறாங்க்க நாங்க எதும்வும் பேசாமல் வெளியே வந்துவிட்டோம்.

அன்று இரவு தூக்கம்வரவில்லை

மறுநாள் இன்னும் கூத்துகள் நடந்தது

வெள்ளிக்கிழமை எங்களுக்கு நல்லநாளாக விடிந்தது

காலையில் வீட்டுக்குபோய் பணம் ஏற்பாடு செய்துவிட்டு மிண்டும் ஆஸ்பதிரிக்கு சென்றேன்

என்மனைவி டாக்டரிடம் ஆப்பிரேசன் இல்லாமல் காப்பாற்றுங்கள் என கெஞ்சினாள்

டாக்டர் அதுமுடியாது கண்டிப்பாக மாற்று லிவர் பொருத்தவேண்டிருக்கும் அதற்கு ஏற்பாடு

செய்கிறோம் பணம் கட்டுங்கள் என சொன்னார்.நாங்கள் வேற ஆஸ்பதிரிக்கு வெள்ளிக்கிழமையே

கண்டிப்பாக மாற்றிவிடவேண்டும் என முயற்சிசெய்துகொண்டிருந்தோம் இதை என்மனைவிக்கு

சொல்லவில்லை. எல்லா நண்பர்களும் வந்துவிட்டார்கள்.திரும்பவும் கவுன்சிலிங்க் கூப்பிட்டார்கள்

இப்பதான் என்மகளின் நிலை கொஞ்சம்பரவாயில்லை இன்னும் ICUவுல 3நாள் இருக்கனும்னு சொன்னாங்க

10நாள் இருக்கனும்ன்னு சொன்னவங்க எப்படிமாற்றிபேசுகிறார்கள்.நாங்கள் வேற ஆஸ்பத்திரிக்கு போகிறோம்ண்ணூ சொல்லிவிட்டு வந்தோம்

வேற ஆஸ்பத்திரியில பேசி எனக்கு உதவிசெய்த டாக்டர் அங்கிருந்தே ஆம்புலன்ஸ் அனுப்பிவைக்கிறேன்னு சொன்னார்.

அதன்படி ஆம்புலன்ஸ் 10மணிவாக்கில் வந்தது அதில் ஒரு டாக்டரும் வந்தார்.வந்த டாக்டரை முதலில் ICUவில் விடமாட்டேன்ன்னு சொல்லிட்டாங்க

அதபின் பெரிய டாக்டரிடம்கேட்டுவிட்டு உள்ளே அனுமதிச்சாங்க. ஆம்புலன்ஸ் வந்தபிறகும் எங்களை நிம்மதியா இருக்கவிடவில்லை

மேலும் கூத்து நடந்தது.

திரும்பவும் கவுன்சிலிங்க கூப்பிட்டாங்க வேற ஆஸ்பத்திரிக்குபோகபோகிறோம் அப்படி இருந்தும் கடைசிகட்ட ஏமாற்றுவேலையை தொடருராங்க

உள்ளே என்மகளை பார்த்த டாக்டர் சந்தன்குமார் இன்னும் இரண்டு டாக்டர்கள் இருந்தார்கள் நாங்கள் மூன்றுபேர் உள்ளேபோனோம் சந்தன் டாக்டர் எங்களிடம்

இப்போது உங்கமகள் 40சதவீதம் சரியாகிவிட்டாள் வேற ஆஸ்பத்திரிக்கு போகவேண்டாம் இங்கயே இருங்கள் என்றார் அதன்பின் சொன்னதுதான் வேடிக்கை

இதுவரை ஒருநாளைக்கு 2.5லட்சம் ஆகியது இனி ICUவுல இருக்கிறதுல இரண்டு மிஜினை எடுத்திடுவோம் அதனால நீங்க இனி ஒருநாளைக்கு 1லட்சம் கட்டினால் போதும்ன்னு சொன்னார். நாங்கள் இல்லை வேற ஆஸ்பத்திரிக்கு கூட்டிகிட்டுபோகிறோன்னு சொல்லிட்டோம்.

உடனே அவர்கள் இப்ப இருக்கிற கண்டிசன்ல ஆம்புலன்ஸ்ல போறது நல்லதில்லைன்னு சொன்னார்கள். நாங்கள் இங்குவைத்துபார்க்கும் அளவுக்கு எங்களுக்கு வசதியில்லை நாங்கள் போகிறோம்ன்னு சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிகிட்டு இருந்தோம்.

இவங்ககிட்ட இருந்து பணம் புடுங்கமுடியாதுன்னு தெரிந்தபிறகு கடைசி ஆயுதமா அவங்க சொன்னதுதான் இவனுங்க டாக்டரா இல்லை எமனான்னு நினைக்கவைத்தது.

அவங்க சொன்னது எங்களிடம் நீங்க ஆப்புலன்ஸ்ல கூட்டிட்டுபோகும்போது ஏதாவது ஆகிவிட்டால் நாங்கள் பொறுப்புகிடையாதுன்னு சொன்னாங்க

இவங்க டாக்டரா இல்லை எமனா நீங்களே சொல்லுங்கள்.

காலையில்வந்த ஆம்புலன்ஸை கிட்டதட்ட 4மணிநேரம் காக்கவச்சாங்க

கவுன்சிலிங்க முடிந்ததும் எங்களை பில்செட்டில் பன்னுங்கன்னு சொல்லி அனுப்புனாங்க

நாங்க உடனே கவுண்டருக்கு சென்று பில்லுக்கு பணம் கட்ட சென்றோம் அங்கு இன்னும் கூத்து முதலில் ஒருபில் கொடுத்தாங்க

அப்புறம் ஒரு பில்கொடுத்தாங்க டிஸ்கவுண்ட் போட்டு

திரும்ப பைனல்பில்லுன்னு ஒன்னு கொடுத்தாங்க

பணம் செட்டில் பன்னிட்டு டிஸ்சார்ஸ் சிலிப்பை வாங்கிகிட்டு ICUவுக்கு போய் கொடுத்துவிட்டுவந்தோம்.

எல்லாம் முடிச்சபிறகும் என்மகளை ஆம்புலன்ஸ்ல ஏற்ற வெகுநேரம் பிடித்தது

ஆம்புலன்ஸ்வந்து 4மணிநேரத்துக்கு பிறகுதான் என்மகளை ஆம்புலன்ஸ்ல ஏற்றினார்கள்.கூடவேநானும் ஏறினேன்

ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாத நிறையபேரை அன்றுநான் பார்த்தேன் இவர்கள் மனிதஜென்மமா இல்லை மிருகங்களான்னு தெரியவில்லை

சிக்னலில் கூட நிப்பாடிவச்சிட்டாங்க மிகவுவும் நொந்துபோனேன். ஒருகார்காரன் வழிவிடாமல் சென்றான் அவனை ஆம்புலன்ஸ் டிரைவர் காரிதுப்பிவிட்டார்

எங்க ஆம்புலன்ஸ் குமரன் ஆஸ்பத்திரியில் போய்சேர்ந்தது. எல்லா டாக்டர்களும் ரெடியா இருந்தாங்க ஆம்புலன்ஸ்ல இருந்து இறக்கினது லிப்ட்க்கு போய் 3மாடிக்கு ICUவுக்கு கொண்டுபோனாங்க என்மகள் கண்விழித்து பார்த்துவிட்டாள் எனக்கு பாதி உயிர்வந்தமாதிரி இருந்து

இந்த மருத்துவமனையில் டாக்டர் சிவகுமார் எங்களுக்குய் தெய்வமாய் தெரிந்தார் அவர் எங்களை கூப்பிட்டு 45நிமிசம் அவர்கேபினில் வைத்துபேசினார்

என் குழந்தையை எப்படி கவனிப்பேனோ அதேமாதிரி கவனித்து மீட்டுகொடுக்கிறேன்னு சொன்னார் எங்களுக்கு முழு நம்பிக்கை வந்தது.

இங்கு பணம் கட்டச்சொல்லி புடுங்கவில்லை.

இரவு அங்கேயே இருந்தேன் காலை 6மணிக்கு ICUவுல கூப்பிட்டாங்க நான் போனேன் அங்க என்மகள் விழித்திருந்தாள் என்னிடம் பேசினாள்.

9.15க்கு குளோபல் டாக்டர் சந்தன் குமார் அவந்தார் நான் ரிசப்சனில் இருந்தே வந்தவர் என்தோளை தட்டி கொடுத்து உங்கமகள் பர்பைட்லி ஆல்ரைட்ன்னு சொன்னார் 18மணிநேரத்துக்கு முன்னாடி மிகமோசமா இருக்கான்னு சொன்ன வாய் இப்ப ஏதும் இல்லைன்னு சொல்லுதேன்னு நினைச்சி சிரிப்புவந்தது

குமரனில் எல்லாம் நல்லபடியா முடிந்தது செவ்வாய் டிஸ்சார்ச்சின்னு சொன்னாங்க நல்லபடியா வீடுவந்துசேர்ந்தோம்.

எல்லா முகநூல் சொந்தங்களுக்கு என்நெஞ்சார்ந்த நன்றி.

கீழே பில் இருக்கு பாருங்கள் இது வெரும் 48மணிநேரத்துக்கானது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-