அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...இவர்கள் உலக முஸ்லிம்களின் மார்க்க தீர்ப்பு தலைமையகமான எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைகழகத்தில் கற்றவர். வயதில் முதிர்ந்த நல்ல அனுபவசாலி, மார்க்க கல்வியும் உயர்கல்வியும் கற்றவர். ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்றவர்.
.
1. அரசு கொடுத்த சைரன் வைத்த காரை வேண்டாம் என்று புறக்கணித்தவர்.
.
2. அரசு ஒதுக்கிய வீட்டை (கோட்டஸ்) வேண்டாம் என்று புறக்கணித்தவர்.
.
3. அரசு கொடுத்த சம்பளத்தை புறக்கணித்தவர்.
.
4. அரசு கொடுத்த தலைமை அலுவலகத்தை புறக்கணித்தவர்.
.
5. அரசு அதிகாரி என்ற கிரீன் கார்டு சலுகைகள் அனைத்தையும் புறக்கணித்தவர்.
.
இத்தகைய ஒரு மார்க்க அறிஞரை ஒழிப்பதில் மும்முரமாக செயல்படும் தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் என்னும் வஹாபி இயக்கம் ஒரு ஸியோனிச கைக்கூலி என்று தமிழ்நாட்டு முஸ்லிம்கள் தெரிவிக்கின்றார்கள்.
.
காலம் முழுதும் பொய் பேசி, மார்கத்தை அரசியலாக்கி ஹராத்தை சாப்பிட்டு இயக்கம் வளர்க்கும் தமிழ்நாட்டு தௌஹீத் ஜமாஅத் என்னும் வஹாபி தருதலைகள் இவரைப் போன்ற ஒரு நேர்மையான மார்க்க அறிஞர் மீது குற்றம் சாட்டுவது சாத்தான் வேதம் ஓதிய கதைதான் என்றும் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.
.
மேலும் இவர்கள் மீது எந்தவொரு தமிழக முஸ்லிம் ஆலிம்கள் யாரும் சுட்டு விரல் நீட்டி அவரை குற்றம் சாட்டியதில்லை. வஹாபிகள் மட்டும்தான் குறை கூறி திரிகிறார்கள்.
.
தமிழ்நாடு அரசு தலைமை காஜி அவர்கள் தமிழக முஸ்லிம்களுக்கு மட்டும்தான் காஜி வஹாபிகளுக்கு அல்ல என்றும் தமிழக முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.
.
ஆதலால் முஸ்லிம்கள் அனைவரும் வஹாபிகளின் சொல், செயலை பின்பற்றாமல், வஹாபிகளின் சூழ்ச்சிகளில் சிக்கி விடாமல் உங்களையும், உங்கள் குடும்பத்தார்களையும் பாதுகாத்து கொள்ளுங்கள்.
.
 தமிழ் நாட்டின் தலைமை காஜி. முப்தி சலாஹுத்தீன் அய்யூபி ஹஸ்ரத் அவர்கள்....

மிக எளிமையான மனிதர்.

தமிழ்நாட்டுக்கே தான் காஜி என்ற கர்வம் இல்லாதவர்.

பள்ளிவாசலிலேயே
அதிக நேரம் வாசம் செய்பவர்.

ஈமானின் வாசம் மிகுந்தவர்.

இக்கட்டுகளைக் கண்டு
ஈமானை இடம் மாற்றாதவர்.

நிர்பந்தங்களுக்கு எதிராக
நிமிர்ந்து நிற்பவர்.

விமானத்தில் பறந்து வரும்போது பிறையைக் கண்டதாகச் சொன்னவரின்
பிதற்றலை புறம் தள்ளியவர்.

நபிகளாரின் சுன்னத்துகளை
செம்மையாக பேணுபவர்.

இத்தனைக்கும் ...
இவர்மீது
சுன்னத் ஜமாத் ஆலிம்கள்
யாரும் சுட்டு விரல் நீட்டி
அவரை குற்றம் சாட்டியதில்லை.

சலாஹுதீன் அய்யூபி அவர்கள்...
சுன்னத் ஜமாத் முஸ்லிம்களுக்குத்தான்
காஜி.

அவர் சொல்லும் நாள்தான் பெருநாள்.

சுன்னத்தையோ
ஜமாத்தையோ
ஏற்காதவர்கள்
அவரையும் ஏற்காதவர்கள்தான்.

அப்படி இருக்க ...
அவரது பெருநாள் அறிவிப்பை விமர்சிக்க அவரை ஏற்காதவர்களுக்கு எந்த அவசியமுமில்லை.

இந்த காலத்திலும்
இப்படி ஒரு நல்ல மனிதர்
தலைமை காஜி பொறுப்பில் இருப்பது தமிழ் முஸ்லிம்களின் பாக்கியம்.!

அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.

நன்றி: Abu Haashima & நெல்லை கனி ஜமாலி.
நன்றி: தமிழக முஸ்லிம்கள்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-