அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

குவைத்:
  #உண்மை_சம்பவம்.....💔💔💔💧💧💧
 குவைத் #Imam_Ja_far_As_Sadiq மசூதி தீவிரவாதி தாக்குதல் உயிர் இழந்த இந்தியரின் கிராம் வளர்ச்சியின் பாதையில்:
      கடந்த ஜூலை 26,2015 இதேபோல் ரம்லான் மாத மத்திய தொழுகையின் போது அந்த துயர சம்பவம் குவைத்தையே உலுக்கியது.
      உடலில் வெடிகுண்டுகளை கட்டிகொண்டு
வந்த தீவிவாதி மசூதியின் உள்ளே நுழைந்து வெடிகுண்டை வெடிக்க செய்தான்.
    இதில் இரண்டு இந்தியர்கள் உட்பட  27 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.227 பேர் படுகாயமடைந்தனர்.
    இவரில் ஒருவர் தான் #சேயது_உஸ்வான்
 இவருடைய மரணம் நடந்த அன்று தான் அவருடைய மனைவிக்கு தலைப் பிரசவமும்
நடந்தது.சேயது_உஸ்மான் பள்ளி காவலாளியாக வேலை செய்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  இவர் உத்திரபிரதேச மாநிலத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தின் வால்பூர் கிராமத்தின் பிறந்த இவருடைய ஊர் தற்போது அனைத்து வசதிகளையும் உடைய கிராமமாக திகழ்கிறது.
    இதற்கு காரணம் அவருடைய குவைத்(நபர்) நண்பர் இஷாம்_கிஜி  இவர் இதே தாக்குதல் தன்னுடைய குடும்பத்தில் உள்ள  தந்தை உட்பட நான்கு உறவுகளை  பறிகொடுத்தார்.
    அவர்களுடைய பெயரில் எதாவது நல்ல காரியங்களைச் செய்ய இவர் திட்டமிட்டார்.
 இந்த நேரத்தில்தான் குண்டு வெடிப்பில் உயிர் இழந்த தன்னுடைய இந்திய நண்பரின்
குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதா அவருடைய
நண்பர்கள் மூலம் தகவல் தெரியவந்துள்ளது.
      எனவே அவருடைய குடும்பத்தினருக்கு
உதவ திட்டமிட்டார்.
    இதற்காக  WhatsApp-யில் ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கினார். இவருடைய
இந்த நல்ல காரிய செயலை அறிந்த பலரும்
உதவ முன்வந்தனர். இப்படி கிடைத்த பணத்தை அவருடைய மனைவிடம்
ஒப்படைக்க குவைத் நண்பர்(இஷாம்_கிஜி)
மற்றும் அவருடைய WhatsApp-யில் நட்பு வட்டத்தில் உள்ள சிலரும் சேர்த்து கிடைத்த பணத்தை நேரடியாக அவருடைய மனைவியிடம் ஒப்படைக்க விரும்பினார்.
    எனவே இவரும் இவருடைய WhatsApp-யில் நட்பு வட்டத்தில் உள்ள சிலரும் சேர்த்து
நேரடியாக உத்திரபிரதேசம் சென்றார் அங்கு சென்று நண்பரின் ஊரை பார்த்த அவருக்கு பேரிடி காத்திருந்தது. கழிவறை வசதிகள்
கூட இல்லாத அந்த ஊரை பார்த்து அவருடைய மனம் வலித்தது.
   குவைத் திரும்பிய அவர் நடந்த நிகழ்ச்சியை  பக்கத்தில் மீண்டும் பதிவு செய்தார். இதை அறிந்த WhatsApp நண்பர்கள் மிக பெரிய
பண உதவிகளை செய்ய முன்வந்தனர்.
    இப்படி கிடைத்த பணத்தை கொண்டு அந்த கிராமத்தில் நான்கு பள்ளி கூடங்கள், 15 கிணறுகள், 43 கழிவறைகளை கட்டி முடித்துள்ளனர்.
  இதை விட தற்போது கிராமத்தில் ஒரு மருத்துவமனையின் வேலை நடைபெற்று வருகிறது. இதை தவிரி அந்த கிராமத்தில் உள்ள மிகவு‌ம் கஷ்டப்பட்டும் சில குடும்பத்தினருக்கும் மாத மாதம் தவறாமல்  பண உதவி அனுப்பி வைத்து வருகின்றனர்.
    இவ்வளவு வசதிகளையும் எங்களுக்கும் வர காரணமான் சேயது_உஸ்வான் இல்லையே என்றும் அவருடைய மனைவி மற்றும் குழந்தை பார்க்கும்போது எல்லாம் மனம் வலிக்கிறது என்று ஊர் மக்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
       நட்புக்கு இதுவே சான்று...
நன்றி: Kuwait-தமிழ் பசங்க

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-